முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

10 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரில்தான் முகேஷ் அம்பானி பயணம் செய்கிறார். அதன் பின்னணியில் இருக்கும் பாதுகாப்பு விஷயங்களை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், பச்சை குழந்தை கூட முகேஷ் அம்பானி என்று மிக சரியாக சொல்லி விடும். இந்திய அளவில் மட்டுமல்லாது ஆசிய மற்றும் உலக அளவிலும் கூட முகேஷ் அம்பானி மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

மும்பையில் உள்ள அவர்களின் அன்டிலியா வீடும், அவர்கள் பயன்படுத்தும் மிக விலை உயர்ந்த கார்களும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு மும்பை நகரில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக ஆடம்பரமான வீடுகளில் இதுவும் ஒன்று. இங்கு கார்களை நிறுத்துவதற்கு என்று மட்டும் 6 தளங்கள் உள்ளன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் கார்களை எந்த அளவிற்கு விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு சாட்சி மட்டுமே. முகேஷ் அம்பானி எங்கு சென்றாலும், அவரது கான்வாயில் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து வரும். இதில், ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

பல்வேறு கார்கள் இருந்தாலும் கூட, முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) காரைதான் பயன்படுத்தி வருகிறார். அவரிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 8.70 கோடி ரூபாய். மிகவும் விலை உயர்ந்த இந்த காரை இந்தியாவில் பதிவு செய்வதற்கு 1.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

ஆக மொத்தத்தில் முகேஷ் அம்பானியின் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் விலை 10 கோடி ரூபாய்க்கு அருகில் வருகிறது. பல்வேறு சூப்பர் கார்கள் மற்றும் லக்ஸரி எஸ்யூவி ரக கார்களை காட்டிலும் இது மிக அதிகமான விலை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அதிகமான விலை கொடுத்து முகேஷ் அம்பானி இந்த காரை வாங்கியிருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

அதை இனி நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம். பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் செடான் ரக கார் ஆகும். ஆனால் முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருவது ரெகுலர் 7-சீரிஸ் கார் கிடையாது. இது ஹை-செக்யூரிட்டி வேரியண்ட் ஆகும். இந்த லக்ஸரி செடான் காரின் 760எல்ஐ வெர்ஷன் (760Li Version) அடிப்படையில், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு மிரட்டலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே ரெகுலர் காரை காட்டிலும் இது முற்றிலும் வித்தியாசமானது. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி கார்தான், விஆர்7 (VR7) பாதுகாப்பு தரநிலைகளுக்கு முழுவதும் இணங்கும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் கவச கார் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

இந்த காரின் டோர் பேனல்களுக்கு இடையில் கெவ்லர் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விண்டோவில் 65 மிமீ தடிமனான புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை எவ்வளவு தெரியுமா? 150 கிலோ கிராம்கள். ராணுவ தர ஆயுதங்களான ஏகே-47 மற்றும் கையெறி குண்டுகளால் இந்த காரை எதுவும் செய்ய முடியாது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

ஒருவேளை ஏகே-47 மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்த கார் மிக எளிதாக அதனை தாங்கி நிற்கும். அத்துடன் 17 கிலோ கிராம் வரையிலான டிஎன்டி-யால் (TNT) நடத்தப்படும் மிக பயங்கரமான வெடிப்புகளையும் கூட பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் கார் எளிதாக தாங்கி நிற்க வல்லது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

இதுதவிர ரசாயன தாக்குதல்கள் மூலமாகவும் இந்த காரை எதுவும் செய்ய முடியாது. ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தேவையான கிட்களை இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரின் உள்ளே எப்போதும் ஆக்ஸிஜன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவசர காலங்களில் இது உதவி செய்யும்.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

குறிப்பாக ரசாயன தாக்குதல்கள் போன்றவை நடத்தப்பட்டால், இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த காரின் கேபினில் தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடையவே கிடையாது. ஒருவேளை தீ பிடித்தால் அதனை ஆட்டோமெட்டிக்காக அணைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் காரில் ட்யூயல் லேயர் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

இது புல்லட் தாக்குதல்களை தாங்கும் வல்லமை வாய்ந்தது. இந்த டயர்கள் பயங்கரமாக சேதமடைந்தாலும் கூட மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும். பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் காரின் எரிபொருள் டேங்க்கில் கசிவு அல்லது வெடிப்பு போன்ற பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பே கிடையாது. அதற்கு ஏற்ற வகையில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

முகேஷ் அம்பானியிடம் உள்ள பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் காரில், ட்வின்-டர்போ 6.0 லிட்டர், வி12 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,250 ஆர்பிஎம்மில் 544 பிஎச்பி பவரையும், 1,500 ஆர்பிஎம்மில் 750 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இதில், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டி விடும் வல்லமை இந்த காருக்கு உள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள். ரெகுலர் 7-சீரிஸ் காரை காட்டிலும் ஹை-செக்யூரிட்டி வேரியண்ட்டின் எடை கணிசமாக அதிகம். இதுபோல் பல்வேறு அதி நவீன பாதுகாப்பு வசதிகள் மட்டுமல்லாது, ஏராளமான சொகுசு வசதிகளும் இந்த காரில் உள்ளன.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

முகேஷ் அம்பானி இந்த காரை வாங்கிய சமயத்திலேயே அதன் விலை 8.70 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). அதாவது ரெகுலர் 7-சீரிஸ் காரை காட்டிலும், முகேஷ் அம்பானி வாங்கியுள்ள ஹை-செக்யூரிட்டி மாடலின் விலை கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு அதிகம். இதுதவிர பதிவு செய்வதற்காக 1.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா? யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்

இந்த காரை பதிவு செய்வதற்காக செலவிடப்பட்டுள்ள தொகையிலேயே, அதிசக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் வாங்க முடியும். ஆனால் ஒருவரின் உயிரை பணத்தை கொண்டு மதிப்பிட முடியாது. அதுவும் முகேஷ் அம்பானி உலக அளவில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். இதுதவிர 10 கோடி ரூபாய் என்பதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani BMW Car Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X