முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 கார்கள் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

உலக பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியும் இருந்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மற்ற தொழில் அதிபர்களை போலவே முகேஷ் அம்பானியும் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகம் விரும்ப கூடியவராக இருக்கிறார். முகேஷ் அம்பானி மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினரும் கார்களை அதிகம் நேசிக்கின்றனர்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

எனவே இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகளவில் வைத்திருக்கும் குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. அம்பானி குடும்பத்தினர் விலை உயர்ந்த கார்களில் பயணிப்பதை நாம் பல முறை பார்த்துள்ளோம். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். ஆனால் நாம் பார்க்காத இன்னும் சில அரிய கார்கள் அம்பானி குடும்பத்திடம் இருக்கின்றன.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

அந்த கார்களை அவர்கள் அடிக்கடி வெளியே எடுத்து வருவதில்லை. அந்த கார்களை அரிதிலும் அரிதாக ஒரு சில முறைகள் மட்டுமே சாலையில் பார்க்க முடிந்துள்ளது. இந்த வரிசையில் லம்போர்கினி அவென்டெடார் எஸ் (Lamborghini Aventador S) கார் ஒன்று அம்பானி குடும்பத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அம்பானி குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அந்த காரை பெரிதாக யாரும் பார்த்ததில்லை.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

இந்த கார் பற்றிய தகவல்கள் தெரியவந்தால், அதை மற்றொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். தற்போது அம்பானி குடும்பத்தினரிடம் இருக்கும் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 SuperFast) மற்றும் மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் (McLaren 520S Spider) ஆகிய கார்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

மணீஷ் ஜெய்ன் என்பவர், அவரது யூ-டியூப் சேனலில் இத்தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஃபெராரி மற்றும் மெக்லாரன் கார்கள் அன்டிலியாவிற்குள் நுழைவதை பார்க்க முடிகிறது. இது இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் ஆடம்பரமான வீடு. இங்குதான் முகேஷ் அம்பானியின் குடும்பம் வசித்து வருகிறது.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

இந்த இரு கார்களும் 'Exotic Cars' என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நிர்வகித்து வரும் நிறுவனம் ஆகும். முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் அனைத்து லேட்டஸ்ட் கார்களும் இந்த நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் புதிய வாகனங்களான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், லம்போர்கினி உருஸ் மற்றும் டெஸ்லா மாடல் எஸ் ஆகிய கார்கள் இந்த நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் ஆகிய இரண்டு கார்களின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட்

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 5.50 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மிகவும் அரிதாகதான் இந்த கார் அவர்களது வீட்டை விட்டு வெளியே வரும்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

இந்த காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 789 பிஎச்பி பவரையும், 718 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை இந்த கார் பெற்றுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

அதே சமயம் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மிகவும் விலை உயர்ந்த இந்த காரில் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களில், ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் தலைசிறந்து விளங்குகிறது.

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர்

இந்தியாவில் மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் கார்களை முதன் முதலில் வாங்கிய குடும்பங்களில் அம்பானி குடும்பமும் ஒன்று. ஆனால் காரை வாங்கிய பின் மிக நீண்ட நாட்களுக்கு அம்பானி குடும்பம் இந்த காரை பயன்படுத்தாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த காரை தற்போதும் கூட சாலைகளில் பார்ப்பது அரிதான ஒரு விஷயம்தான்.

இது இந்தியாவின் அரிய கார்களில் ஒன்று. அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் கார் ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் காரில், 3.8 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்னும் வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டி விடும் திறன் மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர் காருக்கு உள்ளது. இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் கார்பன்-செராமிக் பிரேக்தான். மணிக்கு 100 கிலோ மீட்டரில் சென்று கொண்டிருக்கும் காரின் வேகத்தை வெறும் 32 மீட்டர்களில் இது பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து விடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani Cars: Ferrari 812 SuperFast, McLaren 520S Spider. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X