மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் கட்டணங்கள் குறித்து புதிய தகவல்கள்!

மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பணிகள் ஜரூராக துவங்கி இருக்கின்றன. புல்லட் ரயிலில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, மும்பை பந்த்ரா- குர்லா காம

By Saravana Rajan

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது புல்லட் ரயில் பயண கனவை மேலும் தூண்டுவதாக இருக்கிறது.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் ஜரூராக துவங்கி இருக்கின்றன. வரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று புல்லட் ரயில் சேவையை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

புல்லட் ரயில் கட்டணங்கள் விமானங்களுக்கு இணையாக இருக்கும் என்ற தகவல் உலவி வந்தன. இதுகுறித்து புதிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி, புல்லட் ரயிலில் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 3,000 வரை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

ஏசி முதல் வகுப்பு ரயில் கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு, மும்பை பந்த்ரா- குர்லா காம்ப்ளஸ் ரயில் நிலையத்திலிருந்து தானே வரையில் பயணிக்க 250 ரூபாய் கட்டணமாக இருக்கும். சாதாரண ரயில்களில் 45 நிமிடங்கள் பிடிக்கும் நிலையில், புல்லட் ரயிலில் 15 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

முதல்கட்டமாக 10 பெட்டிகளை கொண்ட 24 ரயில் ஜதை புல்லட் ரயில்களை சேவைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். காலை மற்றும் மாலை வேளைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு புல்லட் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

ஜப்பானில் இயக்கப்படும் ஷின்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையிலான புல்லட் ரயில்கள்தான் இந்தியாவிலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் இதுவரை ஒருமுறை விபத்தில் சிக்கியது கிடையாது. உயிரிழப்புகளும் ஏற்பட்டது இல்லை.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

இந்த ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவிலும் இவை துல்லியமான கால நேரத்தில் இயக்கப்படும். விமானங்களில் செல்லும்போது செக் இன் மற்றும் விமான நிலையத்தை அடைவதற்கான பயண நேரமும், புல்லட் ரயிலின் பயண நேரமும் ஒன்றாகவே இருக்கும்.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

எனவே, விமானங்களில் பயணிப்போர் கூட இந்த ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 20 நிமிட கால இடைவெளியில் இயக்கப்படுவதால், அரக்க பரக்க விமானத்தை பிடிக்க ஓட வேண்டியது இருக்காது. ஒரு ரயிலை விட்டால் கூட அடுத்த ரயிலில் ஏறி செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

அவசரத்திற்கு செல்வோர் விமானங்களில் கடைசி நேரத்தில் பயணிக்க அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால், புல்லட் ரயில்களில் கட்டண மாறுபாடு இருக்காது என்பதால், பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் வழித்தடம் 508 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இதில், 460 கிமீ தூரத்திற்கான கட்டுமானப் பணிகளை இந்திய ஒப்பந்ததாரர்களும், 21 கிமீ நீளமுடைய கடலுக்கு அடியிலான சுங்கப்பாதை கட்டுமானப் பணிகளை ஜப்பானிய பொறியாளர்கள் நேரடியாகவும் செய்ய இருக்கின்றனர்.

300 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 250 ரூபாய் இருந்தால் போதும்!!

மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும். மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் துல்லியமான நேரத்தில் செல்லும் என்பதுடன், 250 ரூபாயில் பயணிக்கலாம் என்பது சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mumbai-Ahmedabad bullet train fares could start as low as Rs 250.
Story first published: Saturday, April 14, 2018, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X