நோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...?

நோ பார்க்கிங்கிற்கு அபராதமாக ரூ. 10 ஆயிரம் விதிக்கப்பட்டு வரும்நிலையில், மும்பை நகர மேயருக்கு ரூ. 100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பிதிவில் காணலாம்.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

நகர்புற சாலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சட்டவிரோத வாகன நிறுத்தம் இருக்கின்றது. இதனால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன், பல்வேறு இன்னல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் சூழல் ஏற்படுகின்றது. சில சமயங்களில், நீண்ட போக்குவரத்து சிக்கலைக்கூட இந்த முறையற்ற வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்துவிடுகின்றன.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

போக்குவரத்து விதிமீறல்களாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, உள்ளிட்டவை எப்படி இறுக்கின்றதோ, அதேபோன்றுதான், நோ பார்க்கிங்கும் இந்தியாவில் சட்ட விரோத குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

இந்த நிலையில், சட்டவிரோத பார்க்கிங்கால் அண்மைக் காலங்களாக மும்பை நகரம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, மும்பை நகரத்தின் சாலைகளில் விதியை மீறி பார்க்கிங் செய்யும் வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க அண்மையில் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

அதனடிப்படையில், முறைகேடாக வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லும் வாகனங்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்ட ரூ. 100 பதிலாக, ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிவ சேனா கட்சியின் தலைவரும் அந்நகரத்தின் மேயருமான மஹதேஸ்வரின் கார், நோ பார்க்கிங் விட்டில் சென்றதாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மும்பை நகரமே நோ பார்க்கிங்கிற்கு எதிராக போர்க் கொடி தூக்கி வரும்நிலையில், மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய, அந்நகரத்தின் மேயரே இவ்வாறு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், நோ பார்க்கிங் போர்டிற்கு நேர் கீழே, அவர் காரை பார்க் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த படத்தை நீங்கள் கீழே காணலாம்...

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

மும்பை நகரப் பகுதியில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 146 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அவை, 34 ஆயிரத்து 808 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்ற அளவிற்கு இடத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், மும்பை நகர வாசிகள் பலர், அவர்களது வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு செல்லுவதாக கூறப்படுகின்றது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

இதுவே, அந்த நகரத்தின் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்க பிரதான காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த பிரச்னையானது, அந்நகர போக்குவரத்துத்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதன்காரணமாகவே, சட்டவிரோத பார்க்கிங்கிற்கு தீர்வு காணும் விதமாக உச்சபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையாக மாற்றப்பட்டது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

இந்த அபராதமானது, வாகனத்தை பார்க்கிங் விடுவதற்கு இட வசதி இருந்தும், நோ பார்க்கிங்கில் வாகனத்தை விட்டுச் சென்றால், இரு இடங்களுக்கும் உள்ள இடைவெளி வேறுபாட்டைக் கணக்கில்கொண்டு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

இதனடிப்படையில், மும்பை நகர மேயருக்கு ரூ. 100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. ஏனென்றால், அவர் பார்க்கிங் செய்த இடத்திலிருந்து 500 மீட்டருக்குள், எந்தவொரு பொது பார்க்கிங் நிலையமும் இல்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அவர் ரூ. 10 ஆயிரம் அபராதத்தில் தப்பித்தித்துள்ளார்.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

அதேசமயம், மும்பை போலீஸார் அண்மைக் காலங்களாக நோ பார்க்கிங் வாகனங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவ்வாறு, இத்திட்டம் கொண்டுவரப்பட்ட முதல் நாளிலேயே ரூ. 1.18 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில், 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இந்த புதிய நடவடிக்கையின் காரணமாக நகரின் பல சாலைகள் சீருற்றநிலையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்...

நோ பார்க்கிங்கிற்கு வழங்கப்பட்ட அபராதத்தை மேயர் மஹதேஸ்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அவர் கூறுகையில், "சட்டவிதிமுறைகள் என்பது ஒவ்வொரு குடிமகனும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இதில், மேயர் என்பதால் விதிவிலக்கு கிடையாது. உணவு விடுதிக்கு சென்றபோது, கவனக்குறைவால், ஓட்டுநர் நோ பார்க்கிங்கில் காரை பார்க்கிங் செய்துவிட்டார். இதற்கு நான் வருந்துவதுடன், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Image Courtesy: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Mayors Car Busted For Wrong Parking. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X