இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ கொடுத்து மிகவும் வித்தியாசமான ஒரு நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானது? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒரு வருடத்திற்கு சுமார் 1.50 லட்சம் பேர் விபத்துக்களில் உயிரிழந்து வருவது, இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை எடுத்து காட்டுகிறது. எனவே இந்திய சாலைகளை உடனடியாக பாதுகாப்பானவையாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு சமீபத்தில் அமலுக்கு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். புதிய மோட்டார் வாகன சட்டம், இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டதால், கடும் எதிர்ப்புகள் எழுந்தன. வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது ஒரு சில மாநில அரசுகளும் இதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இதை எல்லாம் மீறிதான், இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இது போன்ற கடுமையான சட்டங்கள் உண்மையில் இந்தியாவிற்கு தேவைப்படவே செய்கிறது. ஏனெனில் இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. எனவேதான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இது போன்ற நடவடிக்கைகள் மட்டுமல்லாது, விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும் இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தேசிய சாலை பாதுகாப்பு வாரம் போன்றவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இந்த வகையில் 31வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (31st National Road Safety Week) தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 31வது தேசிய சாலை பாதுகாப்பு வாரமானது, கடந்த ஜனவரி 11ம் தேதி தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை இது கடைபிடிக்கப்படவுள்ளது. இளைஞர்கள் சக்தியின் மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மிகவும் வித்தியாசமான ஒரு நடவடிக்கையை போலீசார் எடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது இதில் முக்கியமானதாக உள்ளது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

இந்தியாவில் டூவீலர்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை பின்பற்றுவது கிடையாது. இவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக அபராத ரசீதைதான் போலீசார் வழங்குவார்கள்.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

ஆனால் வழக்கத்திற்கு மாறாக இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு தற்போது போலீசார் ரோஜா பூவை வழங்கி வருகின்றனர். மிகவும் வித்தியாசமான இந்த நடவடிக்கை தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர போக்குவரத்து போலீசார்தான் இந்த வித்தியாசமான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

போக்குவரத்து போலீசாருடன் தன்னார்வலர்களும் உடன் இணைந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசாரும், தன்னார்வலர்களும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ரோஜா பூக்களை வழங்குகின்றனர். அதன்பின் இனி ஹெல்மெட் அணிவேன், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர்.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

2020 தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மும்பை போலீசாரும், போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவும் ‘Slow Down' என்ற விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாகதான் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இது புதுசா இருக்கே... வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கும் போலீசார்! ஏன் தெரியுமா?

வழக்கமாக அபராத ரசீதுகளை கொடுக்கும் போலீசார் தற்போது ரோஜா பூ கொடுப்பதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயுள்ளனர். இனியாவது அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினால் சரி. நீங்களும் இனி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவேன் என இந்த தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தில் உறுதிமொழி எடுத்து கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police Gives Rose To Traffic Violators. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X