சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போலீசார் அவசர அவசரமாக, அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19), பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட தொடக்கத்தில், பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

அத்துடன் தனியார் கார் மற்றும் டூவீலர்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த எச்சரிக்கைகளை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் கொத்து கொத்தாக பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக நாம் முன்னெப்போதும் காணாத நிகழ்வாக, இந்திய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி போயின.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து விட்டன. இதன் ஒரு பகுதியாக வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே இந்திய சாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளன.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதில், மும்பையும் ஒன்று. கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக உருவெடுத்துள்ள மும்பையில், தேவையில்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது, ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட சமயத்தில் எடுத்த நடவடிக்கைகளை போன்றே இன்றளவும் காவல் துறையினரின் நடவடிக்கை உள்ளது.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

சொல்லப்போனால் கட்டுப்பாடுகள் தற்போது இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மும்பை போலீசார், புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்தனர். இந்த விதிமுறைப்படி, ஒருவர் தனது வீட்டில் இருந்து, உரிய காரணம் எதுவும் இல்லாமல், 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் செல்லக்கூடாது.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

இந்த எச்சரிக்கையை மீறினால் வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். எனினும் அலுவலகத்திற்கு செல்வோர், மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் ஆகியோருக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து, தேவை இல்லாமல் 2 கிலோ மீட்டர் தொலைவை கடந்து சென்றனர்.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

இதனால் அவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வகையில் வெறும் நான்கே நாட்களில், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை மும்பை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த வாகனங்களை எல்லாம் அதன் உரிமையாளர்களிடமே படிப்படியாக திரும்ப ஒப்படைக்கும் பணிகளை மும்பை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர்.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடம் இல்லாததே, இதற்கு முக்கியமான காரணம். 'பார்க்கிங் ஸ்பேஸ்' இல்லாததது போலீசாருக்கு தலைவலியாக மாறியுள்ளது. அத்துடன் லக்ஸரி வாகனங்கள் திருடு போய் விடுமோ? என்ற அச்சமும், வாகனங்களை அதன் உரிமையாளர்களிடமே உடனடியாக திரும்ப ஒப்படைக்க போலீசாரை தூண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீண்ட காலம் எங்களுடன் வைத்திருப்பது சாத்தியமில்லை. வாகனங்கள் சேதமடைவதற்கோ அல்லது துருப்பிடிப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன. வாகன உரிமையாளர்கள் பின்னர் எங்களிடம் வந்து, அதன் கண்டிஷன் குறித்து புகார் அளிப்பதை நாங்கள் விரும்பவில்லை'' என்றனர்.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ''குறிப்பாக மெர்சிடிஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற லக்ஸரி வாகனங்கள் குறித்து நாங்கள் அதிகம் கவலை கொண்டுள்ளோம். இந்த வாகனங்கள் ஒருவேளை திருடு போனால், காவல் துறைக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டு விடும். எனவே லக்ஸரி வாகனங்களை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள்தான் நிறுத்தி வைத்துள்ளோம்'' என்றனர்.

சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது

வாகனங்கள் திருடப்பட்டு விடுமோ? என்ற அச்சம் இருப்பதாக காவல் துறையினரே கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஆனால் வாகனம் உடனடியாக கிடைத்து விடும் என்ற தைரியத்தில், தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். ஏனெனில் போலீசாரின் நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே கொரோனா பிரச்னை ஓயும்வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதே நல்லது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police Start Releasing Seized Vehicles Due To Lack Of Parking Space. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X