ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் 500 புதிய பஸ்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டுமென்றால், அதிக பேருந்துகள் தேவை.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

எனவே 500 புதிய பஸ்களை அறிமுகம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதன்படி கடந்த திங்கள் கிழமையில் இருந்து தனியார் அலுவலகங்கள் மற்றும் இன்னும் பல்வேறு தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சுமார் 2 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பயணிகள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. இந்த 500 புதிய பேருந்துகளில், 400 ஏசி மினி பஸ்களும் அடக்கம். ஒரு லாட்டிற்கு தலா 200 என இரண்டு லாட்களில் 400 ஏசி மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுதவிர 100 எலெக்ட்ரிக் பஸ்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். முதல் லாட்டில் 200 ஏசி மினி பஸ்கள் கடந்த ஏப்ரல் மாதமே வந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எனினும் பேருந்துகளை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

புதிய பேருந்துகளின் வருகைக்கு பின் காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஊரடங்கில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. இதனால் சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

குறிப்பாக வட மாநிலங்களில் தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி விட்டது. தமிழகம் போன்ற தென் மாநிலங்களிலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் இன்னமும் நடவடிக்கை எடுத்து கொண்டுதான் உள்ளனர்.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

எனவே அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள். அதுவும் தவறாமல் முக கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள். கூடுதல் பாதுகாப்பிற்கு இரு முக கவசங்களை அணிவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை பின்பற்றினால், கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. பேருந்து சேவைக்கு தமிழ்நாடு அரசு எப்போது மீண்டும் அனுமதி அளிக்கும்? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு விரைவில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் எனவும், விரைவில் முழுமையான இயல்பு நிலை திரும்பும் எனவும் நம்பலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai To Get 500 New Buses: Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, June 9, 2021, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X