இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

சாலையில் சென்றுக் கொண்டிருந்த விலையுயர்ந்த காரை மும்பை போலீஸார் மடக்கியுள்ளனர். எதற்காக போலீஸார் இந்த காரை மடிக்கினார்கள் என தெரிந்தால், நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

இந்தியாவில் ஃபெர்மான்ஸ் கார்களின் பயன்பாடு சமீபகாலமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அவ்வாறு, நாட்டின் பல முக்கியச் சாலைகளில் சூப்பர் கார்கள் பயணிப்பதை நாம் அவ்வப்போது கண்டிருப்போம். அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் பயணித்த ஃபெராரி சூப்பர் மாடல் காரை போலீஸார் மடக்கினர்.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

பின்னர், அந்த காரின் முன்பு அந்த போலீஸார் செய்த காரியத்தைப் பார்த்து, காரின் உரிமையாளர் அந்த போலீஸுக்கு கை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த வீடியோவினை, தற்போது இந்தியாவில் மையம் கொண்டிருக்கும் துபாயைச் சார்ந்த எம்ஓ வ்ளோக்ஸ் தளம், மும்பை அட்வென்சர் என்ற பெயரில் யுடியூபில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

அந்த வீடியோவில் இருப்பது ஃபெராரி-இன் எஃப்430 ஸ்குடெரியா மாடலாகும். இந்தியாவில் இந்த மாடலில் இந்த ஒரு கார் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்ஓ வ்ளோக்ஸ் தளத்தைச் சார்தவர்கள் இந்த காரைக் கொண்டு மும்பை நகரத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வளம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

அவ்வாறு, சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மும்பை நகர போக்குவரத்துப் போலீஸார் ஸ்குடெரியா காரை மடக்கினர். பின்னர், அந்த காரின் ஆவணங்களை சரிபார்த்த போலீஸார், அனைத்தும் சரியாக இருந்த காரணத்தால், காருக்கு எந்தவித அபராதமும் விதிக்காமல் மீண்டும் செல்ல அனுமதித்தனர்.

ஆனால், அதற்கு முன்பாக அங்கு நின்றுக்கொண்டிருந்த போலீஸாரில் ஒருவர் தன்னுடையை ஸ்மார்ட்போனைக் கொண்டு, அந்த காரை புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளார். மேலும், காரின் உட்புறம் உள்ள சில பிரசித்திப் பாகங்களின் பயன்பாடுகளை அவரது ஸ்மார்ட்போனில் காட்சியாகப் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

பின்னர், அந்க காரின் உரிமையாளருக்கு கைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர்களைப் புறப்பட அனுமதிக்கின்றனர். போலீஸாரின் இந்த செயலானது, அவர் ஓர் சூப்பர் கார் விரும்பியாக இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது. இதுபோன்ற அழகிய சூப்பர் கார்களை சாலையில் பார்க்கும் யார் தான் புகைப்படம் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஏன், நாம் அங்கிருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம். பின்னர், இந்த சம்பவத்தைத்தொடர்ந்து, காரின் உரிமையாளர் சிரித்தவாறு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் அவர்களின் சாகசப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...!

வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் ஃபெராரி எஃப்430 ஸ்குடெரியா காரில், 4.3 லிட்டர் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 503பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். அதேபோன்று அதிகபடியான 471 என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இந்த கார் 0-100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.6 செகண்டில் தொட்டுவிடும். இதன் சக்தி வாய்ந்த எஞ்ஜின்கள் அதிகபட்சமாக மணிக்கு 319 கிமீ வேகத்தில செல்லக்கூடிய திறன் பெற்றவையாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Traffic Cops Stopped Ferrari F430 Scuderia For Took Photo.Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X