ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

மாறுவேடத்தில் சென்று ஆட்டோ டிரைவர்களை களையெடுக்கும் அதிகாரிகளின் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

பொதுமக்கள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் ஒன்று ஆட்டோ. ஓலா, உபேர் போன்ற 'கேப்' நிறுவனங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டாலும், ஆட்டோக்களை நம்பி வாழும் பலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால் ஆட்டோ டிரைவர்களின் அடாவடிகளுக்கு ஒரு முடிவே இல்லாமல் போய் கொண்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆட்டோ டிரைவர்களில் பெரும்பாலானோர் மீட்டர் பொருத்துவது கிடையாது. அதற்கு பதிலாக பயணிகளிடம் கட்டண கொள்ளையை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். இதனால் ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர ஆட்டோ டிரைவர்கள் மீது மற்றொரு புகார் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

குறிப்பிட்ட இடங்களுக்கு வர ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் மறுப்பு தெரிவிப்பார்கள். இந்த மோசமான அனுபவம் உங்களில் பலருக்கும் கிடைத்திருக்கலாம். விதிமுறைப்படி இது தவறு. தமிழ் நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க இந்த பிரச்னை நிலவி வருகிறது. எனவே குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு செல்ல மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது அதிகாரிகள் அவ்வப்போது கடும் நடவடிக்கையை எடுக்கின்றனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆனால் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் தொடரவே செய்கிறது. எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது மும்பை மாநகரில் தற்போது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த புகாருக்கு உள்ளான சுமார் 1,000 ஆட்டோ டிரைவர்களின் டிரைவிங் லைசென்ஸ் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

கடந்த 6 மாத கால அளவில், குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்ல மறுத்த 918 ஆட்டோரிக்ஸா டிரைவர்களின் லைசென்ஸை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அதிரடியாக ரத்து செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு காரணங்களால், குறிப்பிட்ட இடங்களுக்கு வர மறுக்கின்றனர். அத்தகைய டிரைவர்களின் லைசென்ஸ்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

எனினும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் அப்பீலை நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்து விட்டது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட டிரைவர்கள் இனி மஹாராஷ்டிரா மாநிலத்தின் எந்த பகுதியிலும் ஆட்டோக்களை இயக்க முடியாது.

MOST READ: தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு.. என்ன தெரியுமா?

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்களுக்கு எதிரான அதிரடி ஆபரேஷன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. மாநில போக்குவரத்து கமிஷனர் சேகர் சென்னே தலைமையில், இந்த அதிரடி ஆபரேஷன் தொடங்கியது. அப்போது முதல் பல்வேறு விதிமீறல்களுக்காக ஒட்டுமொத்தமாக 12,342 ஆட்டோரிக்ஸா டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

MOST READ: தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

இதில், குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல மறுத்த காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆட்டோரிக்ஸா டிரைவர்களின் எண்ணிக்கை மட்டும் 918. அவர்களின் டிரைவிங் லைசென்ஸ்தான் அதிரடியாக ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் தல டோனிதான்... விலையை கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள்...

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆட்டோக்களில் டிரைவர் உள்பட ஒட்டுமொத்தமாக 4 பேர் (1 டிரைவர் + 3 பயணிகள்) மட்டுமே பயணிக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களும் சிக்கியுள்ளனர். அதே சமயம் பேட்ஜ் (அ) டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இருந்த 6,257 ஆட்டோ டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்களை கண்டறிவதற்காக 14 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்ததன் காரணமாகவே இந்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. சிறப்பு படைகளை சேர்ந்த அதிகாரிகள், பயணிகளை போல் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ டிரைவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆனால் இது மிக கடுமையான நடவடிக்கை என ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 918 பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்து விட்டதால், அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தங்களை நிரூபிக்க அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

அதே சமயம் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுகுறித்து மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மீதும் கூட இதுபோன்ற ஏராளமான புகார்கள் உள்ளன. அவர்களை களையெடுக்க தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளும்,போலீசாரும் முன் வருவார்களா? என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

தற்போது ஆட்டோக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையைப் போன்றே, ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சரைப் பொருத்திய பைக்குகளுக்கு எதிராக போலீஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதுகுறித்த சுவராஷ்யமான தகவலை கீழே காணலாம்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. வாகனங்களில் எவ்வித மாடிபிகேஷனும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாளர்கள் வழங்கும் நிலையில்தான் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆனால் ஒரு சில வாகன உரிமையாளர்கள் இந்த உத்தரவை கடைபிடிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் பிரஷர் ஹாரன்கள் (Pressure Horns) மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் (Aftermarket Silencers) ஆகியவற்றின் மூலம்தான் வாகனங்கள் மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஆனால் பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. சாலையில் பயணம் செய்யும் இதர வாகன ஓட்டிகளுக்கும் இதனால் பாதிப்பு உண்டாகிறது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

எனவே டெல்லியில் அனைத்து விதமான பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

ஜஸ்டிஸ் ஃபார் ரைட்ஸ் பவுண்டேஷன் என்ஜிஓ மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் பிரதீக் ஷர்மா தரப்பில் இந்த பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த பொது நல வழக்கு நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

அப்போது பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் போக்குவரத்து போலீசார் தாக்கல் செய்தனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

அதே நேரத்தில் போக்குவரத்து போலீசார் தங்கள் அறிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை தண்டித்துள்ளதாகவும், அனைத்து பிரஷர் ஹாரன்கள், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் அனைத்து விதமான உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

இதுபோன்ற உபகரணங்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி முன்னதாக போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில்தான் போக்குவரத்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த போக்குவரத்து போலீசாரின் இந்த அறிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை தடை செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

எனவே வரும் நாட்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை முழுமையாக பறிமுதல் செய்வது உள்பட போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

முன்னதாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதியை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

இந்த வழக்கு விசாரணையின்போது கட்டாய ஹெல்மெட் விதி தமிழகத்தில் முறையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் இந்த விதிமுறையை மிக கடுமையாக அமல்படுத்த போலீசார் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
12,342 Autorickshaw Drivers Booked For Various Traffic Offences In Mumbai: 918 Driving Licenses Cancelled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more