சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியத்திற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குண்டும், குழியுமான சாலைகள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் சாலைகளில் உள்ள குழிகள் காரணமாக இருக்கின்றன. இந்த சூழலில், மும்பையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்காக இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்கள் குழிகளை தாங்களாகவே அடைத்துள்ளனர்.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வராத நிலையில் அவர்களாகவே குழிகளை அடைத்துள்ளனர். சாலையில் உள்ள குழிகளை அடைக்கும் டிராபிக் கான்ஸ்டபிள்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமையன்று இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்த நல்ல காரியத்தை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்களின் பெயர்கள் சஞ்சய் வாஹா மற்றும் சஹிபுரோ சவான் ஆகும். சாலையின் மைய பகுதியில் இரண்டு பெரிய குழிகள் இருப்பதை இந்த இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்களும் பார்த்தனர். இந்த குழிகள் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எனினும் அங்கு கட்டுமான பணி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. எனவே குழிகளை அடைப்பதற்கு தேவையான பொருட்கள் அங்கு இருந்தன. இந்த பொருட்களை கொண்டு அவர்கள் குழிகளை சரி செய்தனர். இதுகுறித்து தி ஃப்ரீ ப்ரஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

வாகனங்கள் பிரச்னை இல்லாமல் சென்று வருவதற்கு வசதியாக அவர்கள் குழிகளை சரி செய்தனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட டிராபிக் கான்ஸ்டபிள்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பொதுவாக மும்பையில் ஆண்டுதோறும் கனமழை பெய்வது வாடிக்கையாகி விட்டது. அதுவும் கடந்த சில வருடங்களாக மும்பையில் அதிக மழை பெய்து வருகிறது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதன் காரணமாக சாலைகள் எளிதில் சேதமடைந்து விடுகின்றன. மும்பை மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த பிரச்னை இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் லாபம் ஈட்டுவதற்காக குறைந்த செலவில், தரம் இல்லாமல் சாலைகளை அமைப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துக்கள் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதை மட்டும் காரணமாக கூறி விட முடியாது. அது ஒரு காரணம் என்னும் நிலையிலும், சாலைகள் மோசமாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

ஆனால் ஒன்றிய அரசு தற்போது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai: Two Traffic Cops Fill Potholes. Read in Tamil
Story first published: Wednesday, July 28, 2021, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X