வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

தேர்தல் வெற்றிக்கு பின் முதல் முறையாக வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பயன்படுத்திய ஆடம்பர சொகுசு கார் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசியது. தற்போது அது மோடி சுனாமியாக மாறி சுழன்று அடித்ததில், எதிர்கட்சிகள் தடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன. மக்கள் வழங்கிய அமோக ஆதரவுடன், நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கிறார்.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை சுவைத்திருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, சுமார் 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

எனவே வாராணாசி தொகுதி மக்களுக்கு நேற்று (மே 27) பிரதமர் நரேந்திர மோடி நன்றி செலுத்தினார். பிரதமராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட பின் வாரணாசி தொகுதிக்கு நரேந்திர மோடி சென்றிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

தனது நட்சத்திர தலைவருக்கு வாரணாசி ஆரவாரமாக வரவேற்பு அளித்தது. இதற்காக வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அப்போது நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தினார்.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

அத்துடன் வாரணாசியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதற்காக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) காரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார்.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

தற்போது உள்ள அதிகாரப்பூர்வ டேட்டாவை வைத்து பார்க்கையில், இது ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் எஸ்/சி பெட்ரோல் கார் என்பது தெரியவருகிறது. தற்போதைய நிலையில், 3.0 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனில், எல்டபிள்யூபி வோக் மற்றும் எல்டபிள்யூபி வோக் எஸ்இ வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் கார் கிடைக்கிறது.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

3.0 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 340 எச்பி பவரையும், 3,500-5,000 ஆர்பிஎம்மில் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இதில், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இது வெறும் 7.8 வினாடிகளில் எட்டி விடும் வல்லமை வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 209 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் இதற்கு உண்டு.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் பெட்ரோல் எல்டபிள்யூபி வோக் கார் 1.92 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும், ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் பெட்ரோல் எல்டபிள்யூபி வோக் எஸ்இ கார் 2.11 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் எல்டபிள்யூபி காரின் ஒட்டுமொத்த நீளம் 5,200 மிமீ. வீல் பேஸ் 3,120 மிமீ. கண்ணாடிகளுடன் ஒட்டுமொத்த அகலம் 2,220 மிமீ. அதே நேரத்தில் இதன் ஒட்டுமொத்த உயரம் 1,868 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் காரில், குண்டு துளைக்காத கவச கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் அவசர காலங்களில், அவரை பாதுகாப்பதற்கான பல்வேறு அதிநவீன பாதுகாப்பு வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

ரேஞ்ச் ரோவர் வோக் எல்டபிள்யூ காரில், டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ், ஆல்-டெர்ரெய்ன் ப்ராக்ரஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ப்ரேக்-போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்

இதுதவிர கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஸன், எலெக்ட்ரானிக் டிராக்ஸன் கண்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் ரோல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Narendra Modi's Range Rover Vogue. Read in Tamil
Story first published: Tuesday, May 28, 2019, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X