செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள பெர்சவரன்ஸ் விண்கலம் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

சூரிய குடும்பத்தில் பூமியை தவிர, வேறு ஏதேனும் கோள்களில், மனித இனம் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் ஆகிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

மனித இனம் தீவிரமாக ஆராய முயலும் ஒரு கோளாக செவ்வாய் உள்ளது. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் செயற்கைகோளை மிகவும் குறைவான செலவில், செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலமாக உலகையே திரும்பி பார்க்க வைத்தது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளில், மங்கள்யான் ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

தற்போது கொரோனா வைரஸ் மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், செவ்வாய் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில் அமெரிக்காவின் நாசா அமைப்பு பெர்சவரன்ஸ் (Perseverance) என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் அனுப்பியுள்ளது. செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சிகளில் பெர்சவரன்ஸ் முத்திரை பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் விமான படை தளத்தில் இருந்து, அட்லஸ் V ராக்கெட் மூலமாக பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஜூலை 30ம் தேதி (நேற்று முன் தினம்), விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சுமார் 480 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

எனவே பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க சுமார் 7 மாதங்கள் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ க்ராட்டர் எனும் பள்ளத்தில் பெர்சவரன்ஸ் விண்கலத்தை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக ஆராயப்படாமல் இருக்கும் ஒரு பகுதியாகும். நாசா அமைப்பால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் 4வது விண்கலம் இதுவாகும். இதற்கு முன்பாக க்யூரியாசிட்டி, ஆப்பர்சூனட்டி மற்றும் சோஜர்னர் ஆகிய விண்கலங்களை நாசா அமைப்பு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

நாசா அமைப்பு கட்டமைத்ததிலேயே பெர்சவரன்ஸ்தான் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம் ஆகும். ஒரு காரின் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த பெர்சவரன்ஸ் விண்கலம், 6 சக்கரங்களை கொண்டது. இதன் எடை 2,260 பவுண்டுகள் (1,025 கிலோ) ஆகும். சுமார் 10 அடி நீளத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

இந்த விண்கலத்தால் அதிகபட்சமாக மணிக்கு 0.1 மைலுக்கும் குறைவான வேகத்தில்தான் பயணம் செய்ய முடியும். இதன் சக்கரங்கள் டைட்டானியம் ஸ்போக்குகள் உடன் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. பெர்சவரன்ஸ் விண்கலத்தில், 25 கேமராக்கள், 2 மைக்ரோபோன்கள், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை துளையிடும் கருவி மற்றும் லேசர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

அத்துடன் இன்ஜென்யூனிட்டி என பெயரிடப்பட்டுள்ள சிறிய ஹெலிகாப்டரையும், பெர்சவரன்ஸ் விண்கலம் சுமந்து சென்றுள்ளது. பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கும் மாதிரிகள் வரும் 2031ம் ஆண்டில்தான் பூமியை வந்தடையும் என நாசா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அடுத்த தசாப்தத்தின் தொடக்கத்தில்தான் செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் கிடைக்கும்.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

பெர்சவரன்ஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்குவதுதான் மிக சவாலான விஷயம் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏனெனில் அப்போது மணிக்கு 12,000 மைல்கள் என்ற அதிவேகத்தில் இருந்து முழுமையான நிறுத்தத்திற்கு பெர்சவரன்ஸ் விண்கலம் வரும். எனவே விண்கலம் தரையிறங்கும் 7 நிமிடங்கள் திக்... திக்... உணர்வை தரப்போகிறது.

செம த்ரில்லிங்! செவ்வாய்க்கு நாசா அனுப்பிய விண்கலத்தின் ரகசியங்கள்! அந்த 7 நிமிடம்தான் திக்... திக்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பின், பெர்சவரன்ஸ் விண்கலம் ஹெலிகாப்டரை விடுவிக்கும். அத்துடன் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றும் நாசா அமைப்பின் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும். எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என நாசா கூறுகிறது.

விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் ஆய்வுப்பயணங்களை மேற்கொள்ளும்போது அவர்கள் சுவாசிப்பதற்கு இது உதவி செய்யும். நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் குறித்து விளக்கம் அளிக்கும் காணொளியை நீங்கள் மேலே காணலாம். செவ்வாய் கிரகம் தொடர்பான பல மர்ம முடிச்சுக்களை பெர்சவரன்ஸ் அவிழ்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NASA's New Mars Rover: Interesting Facts About Perseverance. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X