பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

கடந்த 2020ம் ஆண்டில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கைக் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ம் ஆண்டின் பெரும் பகுதி ஊரடங்கிலேயே காணப்பட்டது. இதன் விளைவாக மக்கள் நடமாட்டம் மட்டுமின்றி போக்குவரத்தும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

ஊரடங்கு விதிகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட நாட்களிலும் விபத்துகள் மிக அதிகளவில் அரங்கேறியிருப்பதாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியாகியிருக்கும் தகவலின்படி, 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் பேர் சாலை விபத்தில் இறந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

இது நாள் ஒன்றிற்கு 328 பேர் சாலை விபத்தில் இறந்ததற்கு சமம் ஆகும். அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் வெளி வந்திருக்கின்றது. அலட்சியத்தின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 3.92 லட்சம் பேர் உயரிழந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) தெரிவித்துள்ளது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

2020ம் ஆண்டில் அரங்கேறிய இருக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு என அரசு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் 1.36 லட்சம் பேரும், 2018 இல் 1.35 பேரும் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

ஒன்றிய அரசு மேற்கொண்ட கணிசமான நடவடிக்கைகளின் காரணத்தினால் கடந்த ஆண்டில் சற்று விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கின்றது. ஆம், விபத்துகளைக் குறைக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதங்களை உயர்த்தியது மற்றும் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அந்த பகுதியில் விபத்தைக் குறைக்கும் விதமான முயற்சிகளை எடுத்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

2020ம் ஆண்டில் அரங்கேறிய ஒட்டுமொத்த விபத்தில் ஹிட் அண்ட் ரன் வழக்குகள் மட்டும் 41,196 என கூறப்படுகின்றது. சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

அதேவேலையில் இதுவும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு என அரசு புள்ளி விபரங்களின் வாயிலாக தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் 47,504 ஹிட் அண்ட் ரன் வழக்குகளும், 2018ம் ஆண்டில் 47,028 ஹிட் அண்ட் ரன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, 2020ம் ஆண்டில் அரங்கேறியிருக்கும் ஹிட் அண்ட் ரன் வழக்கானது நாள் ஒன்றிற்கு 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கு சமம் ஆகும். இதேபோல், அலட்சியமான மற்றும் ரேஷ் டிரைவால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கைக் குறித்த தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

ரேஷ் டிரைவ் மற்றும் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் 2020 ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.30 லட்சம் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இது 1.60 லட்சமாகவும், 2018ம் ஆண்டில் இது 1.66 லட்சமாகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

கடுமையான காயங்கள்; 2020 ஆண்டில் விபத்துகளினால் கடுமையான காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 85,920 ஆக உள்ளது. இது 2019ம் ஆண்டில் 1.12 லட்சமாகவும், 2018 இல் 1.08 லட்சமாகவும் இருந்தது. இவற்றுடன், ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவலையும் அரசு வெளியிட்டிருக்கின்றது.

பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!

2020ம் ஆண்டில் 52 பேர் அஜாக்கிரதையாக தண்டவாளங்களைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியாகியிருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் இது மிகக் குறைவு என கூறிவிட முடியாது. 2019ல் ஒட்டுமொத்தமாக 55 பேர் பலியாகியிருக்கின்றனர். அதேசமயம், 2018ம் ஆண்டில் 35 பேர் மட்டுமே ரயில் மோதி இறந்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
National crime records bureau revealed 2020 road accidents data
Story first published: Monday, September 20, 2021, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X