பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

பெண் எம்பி வந்த கார்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பாஜக, காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாரமதி தொகுதியில் இருந்து சுப்ரியா சுலே மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தீவிர பிரசாத்தில் ஈடுபட சுப்ரியா சுலே முடிவு செய்துள்ளார். இந்த சூழலில் மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்ற 'சன்வத் டைசி' என்னும் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரிலா சுலே கலந்து கொண்டார்.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

சோலாப்பூர் நகரின் டஃப்ரின் சௌக் பகுதியில் உள்ள ஐஎம்ஏ (IMA - Indian Medical Association) ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது மும்பையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுப்ரியா சுலே வந்த கான்வாய் வாகனங்களுக்கு தற்போது போக்குவரத்து போலீசாரால் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

சுப்ரியா சுலேவின் கான்வாயில் உள்ளடங்கிய மொத்தம் 8 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''நிகழ்ச்சி தொடங்கிய உடன் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

*images for representational purposes only

எனவே நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கும்படி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் பல முறை கடுமையாக எச்சரித்த பின்பும் கூட வாகனங்களை அங்கிருந்து அவர்கள் எடுக்கவில்லை. எனவேதான் மோட்டார் வாகன சட்டத்தின் தகுந்த விதிகளின்படி அபராதம் விதித்தோம்'' என்றனர்.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

சுப்ரியா சுலேவின் கான்வாயில் வந்த சில எஸ்யூவி ரக கார்கள் உள்பட மொத்தம் 8 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு வாகனம் சுப்ரியா சுலே இந்த நிகழ்ச்சிக்கு வர பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

ஆனால் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் சுப்ரியா சுலேவிற்கு சொந்தமான வாகனங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சூழலில் போலீசார் வேண்டுமென்றே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

அத்துடன் அங்கு வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு வேறு இடம் எதுவுமே இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்துவது சட்டப்படி தவறு. நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே உங்கள் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தாதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NCP MP Supriya Sule's Convoy Found In No-Parking Area, Fined By Traffic Police Officials. Read in Tamil
Story first published: Tuesday, August 27, 2019, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X