TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
டிரம்ப் விமானத்திற்கு இணையான கவச பாதுகாப்புடன் வரும் பிரதமர் விமானம்!
அமெரிக்க அதிபரின் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணை கவச பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்காக வாங்கப்பட்ட புதிய விமானங்களுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்பாட்டிற்காக போயிங் 747 என்ற இரண்டு அடுக்கு ஜம்போ விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த விமானங்களில் பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த இரு விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்திய விமானப்படையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற பைலட்டுகள் மூலமாக இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு விமானங்களும் பழமையாகிவிட்டதோடு, நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இல்லை. இதனையடுத்து, பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்பாட்டிற்காக பழமையாகிவிட்ட காரணத்தால், அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.
அதன்படி, போயிங் 777 என்ற மிக பிரம்மாண்டமான இரண்டு விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை ஆர்டர் செய்தது. இந்த இரண்டு விமானங்களும் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்பாக டெலிவிரி பெறப்பட்டன.
இந்த இரண்டு விமானங்களும் தற்போது பிரதமர், ஜனாதிபதி பயன்பாட்டிற்கு தக்கவாறு பல்வேறு அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து விமானத்தை பாதுகாப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தற்போது இரண்டு புதிய விமானங்களுக்கான ஏவுகணை தாக்குதலிருந்து தப்புவதற்கான கவச தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையானது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஈரவை கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
உலகின் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக கருதப்படும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைத்தான் தற்போது இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கும் விமானங்களிலும் பயன்படுத்ததப்பட இருக்கிறது.
இந்த கவச தொழில்நுட்பத்தில் Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) and Self-Protection Suites (SPS) என்ற கவச பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதன்மூலமாக, ஏவுகணை தாக்குதல் தொடர்பாக விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு உடனடி எச்சரிக்கை தரும்.
அடுத்து, ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் பணிகளையும் தானியங்கி முறையில் இந்த எஸ்பிஎஸ் தொழில்நுட்பம் செய்யும். அதாவது, தாக்குதலை முறியடிக்க மனித முயற்சி தேவையிருக்காது. தற்போது பயன்படுத்தும் தற்காப்பு பாதுகாப்பு நுட்பத்தைவிட இந்த புதிய கவச பாதுகாப்பு மிக துல்லியமாக இருப்பதுடன், தேவையற்ற எச்சரிக்கைகளையும் தவிர்க்கும்.
இரண்டு போயிங் 777 விமானங்கள் மற்றும் கவச பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து ரூ.5,900 கோடி அடக்க விலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கான புதிய ஏர் இந்தியா ஒன் விமானங்கள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஏர் இந்தியா ஒன் விமானங்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்படுத்தாதபோது, வர்த்தக ரீதியில் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஏர் இந்தியா ஒன் விமானங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதன் மூலமாக, இந்திய - அமெரிக்க இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவதற்கும், தெரிந்து கொள்வதிலும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்கா என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இருந்து மலேசியா சென்று கொண்டிருந்த எம்-17 என்ற விமானம் ரஷ்ய ஆதரவாளர்கள் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அதில் பயணித்த 298 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அதே வழித்தடத்தில் சில நிமிட இடைவெளியில் வந்து கொண்டிருந்த பிரதமர் மோடியின் விமானம் மயிரிழையில் தப்பியது. இதையடுத்து, ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்புவதற்கான கவச பாதுகாப்புடன் புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.