160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

இந்தியாவின் அனைத்து முக்கிய இரயில் வழிதடங்களில் விரைவில் இரண்டு தளங்கள் கொண்ட புதிய இரயில் பெட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

வாழ்க்கையில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் அதே செய்தாலும் சளிக்காதது இரயில் பயணம் என்பார்கள். அதிவேகத்தில் குளிர்சாதனங்களுடன் இயங்கும் இரயிலாக இருந்தாலும் சரி, சாதாரண லோக்கல் மின்சார இரயிலாக இருந்தாலும் சரி இரயில் பயணம் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியவை.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

இதனை மேலும் அதிகரிக்க மத்திய அரசாங்கமும், இரயில்வே நிர்வாகமும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவாறு தான் உள்ளன. இத்தகைய முயற்சிகளின் வெளிப்பாடாகவே புதிய மித-வேக இரட்டை-தளம் கொண்ட இரயில்பெட்டிகளை இரயில்வே நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

இந்த புதிய இரு-தளம் கொண்ட இரயில் அதிகபட்சமாக 160kmph என்ற வேகத்தில் இயங்கக்கூடியது என்றும் இதன் ஒவ்வொரு பெட்டியிலும் மேல் தளத்தில் 50 நபர்கள் உள்பட 120 பயணிகள் தாராளமாக அமரலாம் என்றும் இரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

கபுர்தலாவில் உள்ள இரயில்பெட்டி தொழிற்சாலையில் இந்த புதிய இரட்டை-தள இரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய இரயில் பெட்டியின் மத்திய பகுதியில் ஒருபுறத்தில் மேலும், கீழும் சேர்த்து 16 இருக்கைகளும், மறுபுறத்தில் 6 இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

மேலும், வணிக சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்பாக மேலதிக ஊசலாட்ட சோதனைகளுக்காக இந்த பெட்டி லக்னோவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தரநிலை அமைப்புக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் இதுகுறித்த இரயில்வே நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

கூடுதல் சவுகரியத்திற்காக சற்று அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை-தள பெட்டியில் தலைக்கு மேல் பொருட்களை வைக்க அலமாரி, மொபைல் & லேப்டாப் சார்ஜிங் துளைகள் மற்றும் எல்இடி தரத்தில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடங்களை காட்டும் போர்டு உள்ளிட்டவற்றுடன் ஜிபிஎஸ்-சார்ந்த பயணிகள் தகவல் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

தானியங்கி கதவுகளை கொண்ட இந்த இரட்டை-தள பெட்டிக்குள் நுழைந்தவுடனே முதலில் நம் கண்ணில் படுவது கேன்டீனாக தான் இருக்கும். இந்தியாவில் இவ்வாறான இரட்டை-தள இரயில்பெட்டிகளை தயாரிக்கும் ஒரே யூனிட் ஆக ஆர்சிஎஃப் (இரயில்பெட்டி தொழிற்சாலை) விளங்கி வருகிறது.

160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்!! பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆயத்தமாகும் இரயில்வே

ஏசி இல்லாமல் ‘ஐசிஎஃப்-வடிவிலான' இரட்டை-தள பெட்டிகளை 1990களிலேயே தயாரித்துள்ள இந்த தொழிற்சாலை, ஏசி உடன் 130kmph வேகத்தில் இயங்கக்கூடிய முதல் இரட்டை-தள பெட்டியை 2010 மார்ச் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதன்பின் கடந்த 2019 மார்ச் மாதத்தில் உதய் இரட்டை-தள பெட்டிகள் கூடுதல் வசதிகளுடன் தயாரிக்கப்பட்டன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Faster Double-decker Train Coach to Run at 160 kmph on All Major Routes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X