யாருக்குமே தெரிவதில்லை... இதை செய்ய தவறினால் உயிருக்கே ஆபத்து... மீறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

காரில் பயணிக்கும்போது நீங்கள் இதை செய்ய தவறினால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி இதற்கான அபராதம் எவ்வளவு? என்பது குறித்த விரிவான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இந்தியாவில் கார்களில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணிவது கிடையாது. சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணராததே இதற்கு காரணம். நகர எல்லைக்குள் சீட் பெல்ட் அணிவது தேவையற்றது என பலர் நினைத்து கொண்டுள்ளனர். நகர எல்லைகளில் கார் மிகவும் மெதுவாகதானே செல்கிறது? பின் ஏன் சீட் பெல்ட் அணிய வேண்டும்? என அவர்கள் நினைக்கின்றனர்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

ஆனால் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் கார் சென்று கொண்டிருக்கும் போது நடைபெறும் அனைத்து விபத்துக்களுமே மிகவும் அபாயகரமானவைதான். அவ்வளவு ஏன்? அதற்கும் கீழான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும்போது நடைபெறும் விபத்துக்களும் கூட மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இந்த நேரத்தில் நீங்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், காரின் டேஷ் போர்டு உள்ளிட்ட இதர பாகங்களில் உங்கள் உடல் மோதி கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் சீட் பெல்ட் அணிவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

அதாவது முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் என அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றுவதே கிடையாது. முன் இருக்கையை போல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

ஏனெனில் கார் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது, சாலை விபத்து நிகழ்ந்தால், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மீது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மோத நேரிடும். இது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணித்தால் இந்த அபாயங்களை தவிர்க்கலாம்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இந்தியாவில் இதற்கு முன்பாக நடைபெற்ற சில சாலை விபத்துக்களில், சீட் பெல்ட் அணியாத பின் இருக்கை பயணிகள் காரின் விண்டு ஷீல்டு மீது மோதி படுகாயமடைந்த சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன. ஆனால் இவ்வளவு நன்மை பயக்கும் சீட் பெல்ட்டை காரில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் அணிவது கிடையாது.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

சீட் பெல்ட் அணிவதை பலர் அசௌகரியமாக கருதுகின்றனர். எனவே சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டும் ஓரளவிற்கு சீட் பெல்ட் அணிய தொடங்கினர். ஆனால் பின் இருக்கை பயணிகளை சீட் பெல்ட் அணிய வைக்க முடியவில்லை.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

உண்மையில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்றுதான் பலர் நினைத்து கொண்டுள்ளனர். பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனை போலீசாரும் முறையாக அமல்படுத்தவில்லை என்றும் கூட சொல்லலாம்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

ஏனெனில் கார்களை சோதனை செய்யும்போது, முன் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா? என்று மட்டுமே போலீசார் பார்ப்பார்கள். பின் இருக்கை பயணிகளை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இதன் காரணமாக பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய தேவையில்லை என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

ஆனால் இனி மேல் நீங்கள் காரில் பயணம் செய்யும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி, காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிக்காவிட்டால், நீங்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும். இது பின் இருக்கை பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இந்தியாவை பொறுத்தவரை சீட் பெல்ட் இல்லாமல் கார்களை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கார்களில் எத்தனை இருக்கைகள் இருக்கிறதோ அதே எண்ணிக்கையிலான சீட் பெல்ட்களும் காரில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இதனை கார் உற்பத்தியாளர்கள் கட்டாயமாக வழங்கியே ஆக வேண்டும்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இதனிடையே காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை குறி வைத்து பிடிக்க சண்டிகர் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். பின் இருக்கை பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சீட் பெல்ட் அணியாவிட்டால், புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் படி அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் சண்டிகர் போலீசார் கூறியுள்ளனர்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

இதேபோல் இந்தியா முழுக்க இனி சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இது பின் இருக்கை பயணிகளுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்பு போல் பின் இருக்கையை போலீசார் கவனிக்க மாட்டார்கள் என அலட்சியமாக இருந்து விட வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.

யாருக்குமே தெரிவதில்லை... காரில் செல்லும் போது இதை செய்ய தவறினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது

அத்துடன் உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதேபோல் நீங்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால், கார்களில் ஏர் பேக் வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து நடைபெறும் சமயங்களில், ஏர் பேக்குகள்தான் காரில் பயணம் செய்பவர்களின் உயிரை காப்பாற்றுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Motor Vehicle Act: Rs.1,000 Fine For Front And Rear Seat Passengers For Not Wearing Seatbelt. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X