ஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. ரகசியமாக பட்டியல் தயாரிக்கும் ஆர்டிஓக்கள்

'ஒரு நபருக்கு ஒரு வாகனம்' என்ற கடுமையான சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

By Arun

'ஒரு நபருக்கு ஒரு வாகனம்' என்ற கடுமையான சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை வழங்கும்படி ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இந்தியாவில் கடந்த 2016-17ம் நிதியாண்டில், மொத்தம் 30,47,582 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது ஒரு சாதனையாகும். ஏனெனில் இதற்கு முன்பாக வேறு எப்போதும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையானது இல்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

முறியடிக்க முடியாத சாதனை என வர்ணிக்கப்பட்டாலும், ஓராண்டுக்கு கூட இந்த சாதனை தாக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அதற்கு அடுத்து வந்த 2017-18ம் நிதியாண்டில், மொத்தம் 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவது, இந்த புள்ளி விபரங்கள் மூலம் நிரூபணமாகிறது. ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபக்கம் வாகனங்களின் விலையும் கூட அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

அப்படி இருந்தும், அதிக அளவிலான வாகனங்கள் விற்பனையாகி கொண்டுதான் உள்ளன. மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனை பொருளாதார ரீதியில் அடைந்த முன்னேற்றம் என எடுத்து கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து கொண்டிருக்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

மறுபக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில், போக்குவரத்து நெரிசல் இன்று பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

எனவே வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து விட்டு, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இந்த சூழலில், 'ஒரு நபருக்கு ஒரு வாகனம்' என்ற கடுமையான சட்டத்தை அமலுக்கு கொண்டு வர குஜராத் அரசு திட்டமிட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக, இந்த அதிரடியான சட்டத்தை பிறப்பிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு, குஜராத் மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு (ஆர்டிஓ), அம்மாநில போக்குவரத்து துறை கமிஷனர் ரகசியமாக உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இதுதவிர 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களையும் ஒரேயடியாக தடை செய்து விடவும் குஜராத் அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வாகனங்களின் விபரங்களை அளிக்குமாறும் ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் தலையாய பிரச்னையாக உருவெடுத்து வருவதால், இது போன்ற கடுமையான சட்டங்களை அமல்படுத்தியே ஆக வேண்டிய அவசியம் இருப்பதாக குஜராத் அரசு கருதுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

குஜராத் சாலை பாதுகாப்பு சட்டம் 2018ல் திருத்தங்களை மேற்கொள்வது அல்லது அதே சட்டத்தின் ஆர்டிகிள் 33ன் கீழ் அரசாணை வெளியிடுவது ஆகியவற்றின் மூலமாக மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும். அதற்கான முயற்சிகளை குஜராத் அரசு எடுத்து வருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிக்க குஜராத் அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருந்தினர்களுக்கு உரிய பார்க்கிங் வசதியை வழங்காத புகழ்பெற்ற கிளப் ஒன்றுக்கு சீல் வைத்து, குஜராத் அரசு அதிரடி காட்டிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக, அந்த கிளப்பிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவது வழக்கம். ஆனால் அவர்களுக்கு, பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் விருந்தினர்கள், தங்கள் கார்களை சாலை ஓரங்களிலேயே பார்க்கிங் செய்ய தொடங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இதனால் அந்த கிளப்பிற்கு குஜராத் அரசு அதிரடியாக சீல் வைத்தது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் வசதியை வழங்க வேண்டும் என்றும், அதை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வணிக வளாகங்களின் நிர்வாகங்களுக்கு அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

இதனிடையே பெங்களூரு பெரு நகர எல்லையில், வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியும் என்ற சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய உத்தரவு

ஏனெனில் பார்க்கிங் செய்வதற்கான இட வசதி இல்லாததால், மக்கள் பலர் சாலை ஓரங்களிலேயே தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவேதான் 2019ம் ஆண்டு முதல் இந்த கடுமையான சட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Rule to Reduce the Traffic Congestion and Pollution. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X