இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில்மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்ட திருத்தங்

By Balasubramanian

இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் அனுமதிக்கப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்ட திருத்தங்களை வரும் டிச., 1ம் தேதி முதல் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் இதை கட்டுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ட்ரோன் பயன்பாடு, ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்பு மக்கள் கையில் எளிதாக கிடைக்க துவங்கிவிட்டது.முதலில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ட்ரோன்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இன்று இந்தியாவிலியே சிறிய ரக ட்ரோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இன்று ஒரு கல்யாண வீட்டிற்கான வீடியோ, குறிப்பிட்ட ஒரு இடத்தின் அழகை காட்டுவதற்காக, சினிமா படபிடிப்பிற்காக, இப்படி ட்ரோன்கள் இன்று மக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டிற்கு வந்ததுவிட்டது. இந்த ட்ரோன்களால் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அவ்வளவு கெட்ட விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்த ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கண்காணிப்பது, மற்றவர்களின் ரகசியங்களை வீடியோ எடுத்து ஆவணப்படுத்துவது என சில சட்ட விரோத செயல்களுக்கு இந்த ட்ரோன்கள் பயன்பட துவங்கின. இந்தியாவை பொருத்தவரை விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த எந்த விதிகளும் இல்லை.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த சட்ட திருத்தங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி ரிமோட் பைலட் ஏர்கிராஃப்ட் அல்லது ஆட்டோனமஸ் ஏர் கிராஃப்ட் மற்றும் மாதிரி ஏர்கிராப்ட் ஆகிய வகையான ஏர்கிராஃப்களுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இதில் சாதாரண ட்ரோன்கள் முதல் பல்வேறு பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வரை இதில் உள்ளடங்கும். அதாவது ஆளில்லாமல் ஒரு இடத்தில் உள்ள கட்டுப்பாடுகளிலோ, அல்லது ஒரு இடத்தில் இருந்து வரும் உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலான ட்ரோன்கள் இந்த கேட்டகிரியில் அடங்கும்.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

அரசு இந்த ட்ரோன்களை பல்வேறு வகையாக அதன் எடைக்கு ஏற்ப பிரித்துள்ளது. 250 கிராம் மற்றும் அதற்கும் குறைவான எடை கொண்ட ட்ரோன்களை "நானோ" என்ற வகையிலும், 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான எடை உள்ள ட்ரோன்களை "மைக்ரோ" என்ற வகையிலும்,

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

2 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ட்ரோன்களை " சிறிய ட்ரோன்கள்" என்ற வகையிலும், 25 கிலோ முதல் 150 கிலோ எடையுள்ள ட்ரோன்களை "நடுத்தர ட்ரோன்கள்" என்ற வகையிலும், 150 கிலோவிற்கு அதிக எடையுள்ள ட்ரோன்களை "பெரிய ட்ரோன்கள்" என்ற வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்நிலையில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த தனிப்பட்ட அடையான எண்ணை (UID) அரசு வழங்குகிறது. நீங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் அந்த எண் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை வாங்குகிறீர்கள் என்றால் உங்களிடம் டிஜிசிஏ கிளியரன்ஸ் கிடைக்க தனிப்பட்ட அடையாள எண் (UID), மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்கும் ஆப்ரேட்டர் அனுமதியையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இது நானோ வகை ட்ரோன்களுக்கு மட்டும் விதிவிலைக்கு அளிக்கப்பட்டுள்ளது நீங்கள் 250 கிராமிற்கும் குறைவான எடையுள்ள ட்ரோன்களை வாங்க இந்த தனிப்பட்ட அடையாள எண் (UID) தேவையில்லை. அதை யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தலாம்

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

தற்போது பிரபலமாக உள்ள பல்வேறு ட்ரோன்கள் குறைந்தது. 300 கிராமில் இருந்து 1300 கிராம் வரையிலான எடைகளை கொண்டது. அனுமதிதேவையில்லாத ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் மார்கெட்டில் அந்த எடைப்பிரிவை கொண்ட ட்ரோனை வாங்கவேண்டும் ஆனால் அதற்கான ஆப்ஷன் அந்த எடைப்பிரிவில் மிகக்குறைவு

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மாதிரி ஏர்கிராஃப்ட்களை கல்வி பயன்பாட்டிற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ வரையிலான மாதிரி ஏர் கிராஃப்ட்களை கல்வி நிறுவன வளாகத்திற்குள் சுமார் 200 அடி உயரம் வரை எந்த வித அனுமதி, தனிபட்ட அடையாள எண் (UID), என எந்த அனுமதியும் இல்லாமல் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்த மாதிரி ஏர்கிராஃப்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் இதை வடிவமைத்த அல்லது கட்டமைத்தவர் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் போது அந்த பகுதி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சுமார் 24 மணி நேரத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கல்வி பயிற்சிக்காக மட்டுமே இதை பயன்பாடுத்த வேண்டும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த அனுமதியில்லை.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மற்ற காரணங்களுக்காக ட்ரோன்களை பயன்படுத்த அளில்லா விமான கட்டுப்பாட்டு ஆணையத்தில் அவர்கள் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பித்த 7 நாட்களில் அதற்கான அனுமதி வழங்கப்படும்.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மேலும் இந்த ரக ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ட்ரோன்களை 18 வயதிற்கு மேற்பட்டவர் தான் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அதை பயன்படுத்துபவர் கட்டாயம் 10ம் வகுப்பில் ஆங்கில பாடத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்த ட்ரோன்களை பயன்படுத்தும் போது செய்யகூடாத சில விஷயங்களும் இதில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இந்த ட்ரோன்களை கட்டாயம் பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், கண் பார்வையில் ட்ரோன் பறக்கும் தூரத்திற்கே ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம் 450 மீட்டருக்கு மேல் இதை பயன்படுத்த கூடாது. மழை மற்றும் இடி இடிக்கும் நேரங்களில் இதை பயன்படுத்த அனுமதியில்லை.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மேலும் இந்தியாவில் சில இடங்களில் இதை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவைகளை பற்றி கீழே பார்க்கலாம்.

1. மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை சுற்றியுள்ள 5 கி.மீ பகுதிகளில் இதை பயன்படுத்த கூடாது.

2. நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்கள், தனியார் மற்றும் ராணுவ விமான முகாம்கள் உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 3 கீ.மீ தூரத்திற்கு இதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

3. சர்வதேச எல்லை பகுதிகளான எல்ஓசி (LoC), எல்ஏசி(LAC), அக்சூவல் கிரவுண்ட் போஷிஷன் லைன்(AGPL), உள்ளிட்ட பகுதியில் சுற்றி உள்ள 25 கி.மீ தூரத்திற்கு இதை பயன்படுத்த கூடாது.

4. கடல் பகுதியில் 500 மீட்டரை தாண்டி பயன்படுத்த கூடாது, 500 மீட்டருக்கும் பயன்படுத்தும் போதும் அதற்கான கிரவுண்ட் ஸ்டேஷன் தரையில் தான் இருக்க வேண்டும் படகில், கப்பலில் கிரவுண்ட் ஸ்டேஷன் அமைக்க கூடாது.

5. இந்திய ராணுவ முகாம்கள், ராணுவ செயல்பாடு நடக்கும் இடங்கள், உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 3 கீ.மீ. தூரத்திற்கு இதை பயன்படுத்தகூடாது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

6. டில்லி பிரதமர் வீட்டை சுற்றி 5 கி.மீ பகுதியில் இதை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்த சிறப்பு அனுமதியை பெற வேண்டும்.

7. மாநில தலைமைய செயலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றி 3 கி.மீ சுற்றளவில் இதை பயன்படுத்த கூடாது.

8. கார், பைக், கப்பல், விமானம் போன்ற நகரும் வாகனங்கள் அல்லது பொருட்களில் கிராவுண்ட் ஸ்டேஷன் அமைத்து இதை பயன்படுத்த கூடாது.

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

10. தேசிய பூங்காக்கள், வன விலங்குகள் சரணாலயம், ஆகிய பகுதிகளில் முறையான அனுமதியில்லாமல் இதை பயன்படுத்த கூடாது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் டிச., 1ம் தேதி அமலுக்கு வருவதாக விமானபோக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

ஆம். விமான ஜன்னல்கள் சதுரமாகவோ அல்லது கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு வட்டமாகவோ அல்லது கோள வடிவிலோ வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்த சற்றே ஆய்வு செய்தோமேயானால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

1949ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான டீ ஹாவிலேண்ட் காமட் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக பாராட்டுகளை பெற்றன.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

இதனால் அதிர்ச்சியடைந்த விமான தயாரிப்பு நிறுவனம், இதுகுறித்து தீவிர விசாரணைகளையும், ஆய்வுகளையும் நடத்தியது. ஆனால், விமானங்கள் நடுவானில் திடீரென வெடிப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பின.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

இந்த சூழலில் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

விமானம் அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். கூர்மையான முனை பகுதிகள் வலு இல்லாத பகுதியாக இருப்பதும் தெரிந்தது.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

இதையடுத்து, ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில், வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.

விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்?

இதுபோன்று வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
New rules for using drones in india, need to get UID for using it. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X