Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க திட்டம்... எந்த ஊரில் தெரியுமா?
பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சிலர் தங்கள் வாகனங்களை, தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்து கொள்கின்றனர். வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என 'நோ பார்க்கிங்' பலகை வைத்திருக்கும் இடங்களில் கூட வாகனங்களை நிறுத்தி கொள்வது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொண்டுள்ளனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்துள்ளவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, சன்மானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடாக வாகனத்தை பார்க்கிங் செய்தவரிடம் இருந்து வசூலிக்கும் அபராத தொகையின் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் தவறாக பார்க்கிங் செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், அந்த தவறை செய்பவர்கள் குறித்து தகவல் அளிக்க பொதுமக்கள் பலர் முன்வருவதை ஊக்குவிப்பதற்காகவும் நியூயார்க் நகரில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த திட்டத்தின்படி, பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கும் நபர்களுக்கு, விதிமுறையை மீறிய நபர் செலுத்தும் மொத்த அபராத தொகையில் 25 சதவீத தொகை சன்மானமாக வழங்கப்படும். நியூயார்க் நகரில், பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை தற்போது 115 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதனை 175 அமெரிக்க டாலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 25 சதவீத தொகையை புகார் அளிக்கும் நபர் சன்மானமாக பெறுவார். 175 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே புகார் அளிக்கும் நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 3,250 ரூபாய் சன்மானமாக கிடைக்கும்.

கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஏற்கனவே பெரு நகரங்களின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாகி வருகிறது. போதாக்குறைக்கு விதிமுறைகளுக்கு எதிராக வாகனங்கள் சாலையை அடைத்து கொள்வதால், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது.

இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, சில சமயங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கும் தாமதம் ஏற்படுகிறது. பார்க்கிங் செய்யக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். உதாரணத்திற்கு பரபரப்பாக இருக்கும் சாலையோரத்தில் காரை நிறுத்தினால், மற்ற வாகனங்களால் அந்த காரில் கீறல் விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Note: Images used are for representational purpose only.