இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவின்படி கடைகள் மதியம் 12 மணி வரையில் மட்டுமே திறந்து வைக்கப்படுகின்றனர். அதிலும் தற்போது கூடுதல் கட்டுப்பாடாக 12 மணியில் இருந்து காலை 10 மணியாக கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

அதேபோல் இந்த ஊரடங்கு காலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான சிலர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய உத்தரவுகள் குறிப்பாக போலீஸாருக்கு பெரும் தலைவலிகளாகியுள்ளன.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

அதேநேரம் சில போலீஸார் வேலை பழுவிற்கும் மத்தியில் பொதுமக்களை சந்தோஷப்படுத்த முயற்சிக்கின்றனர் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். அத்தகைய போலீஸார்களுள் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில் இருப்பவர் ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா. பஞ்சாப் போலீஸ் அதிகாரியான இவர் மாலைகளை அணிந்தப்படி பைக்கில் வந்த புதுமண தம்பதிக்கு பூ கொடுத்து வரவேற்றுள்ளார். பூ உடன் தனது பர்ஸை திறந்து அவர்களுக்கு பணத்தையும் இந்த ஐபிஎஸ் அதிகாரி வழங்கியுள்ளார்.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

மேலும், இந்த நிகழ்வை காட்சிப்படுத்தி தீபன்ஷீ கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிவிட்டர் பதிவில் வீடியோவுடன், தற்போதைய ஊரடங்கு சூழலில், புதுமண தம்பதி பைக்கில் அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

அவர்களை போலீஸார் குடும்பத்தின் மூத்தவர்கள் போல் வாழ்த்துகளை கூறி அனுப்பி வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். தீபன்ஷு கப்ராவை பதிவிட்டுள்ள வீடியோ சுமார் 56 ஆயிரத்திற்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.

இதுதாங்க போலீஸ்!! ஊரடங்கிற்கு மத்தியில் பஞ்சாப்பில் ஹீரோவாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

இவரது டிவிட்டர் பதிவை சுமார் 6 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர், 837 பேர் இதுவரையில் ரீட்விட் செய்துள்ளனர். கடுமையான ஊரடங்கு உத்தரவுகளினால் போலீஸாரின் மீது பொது மக்கள் சிலருக்கு சில தவறான எண்ணங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை போலீஸார்களின் இவ்வாறான செயல்களினால் சற்று மாறலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Newly Married Couple Going By Bike IPS Had To Post Videos.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X