சட்டென்று மாறுது வானிலை... இந்திய கார்களில் வேகமாக இடம்பிடித்து வரும் நவீன வசதிகள்!

By Saravana

பயணத்தை சுகமாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் கார்களில் நித்தமும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்பு விலையுயர்ந்த கார்களில் வியப்பாகவும், ஏக்கமாகவும் பார்க்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பல இன்று இந்தியாவின் பட்ஜெட் கார்களில்கூட எளிதாக இடம்பெற்று வருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிலை இன்னமும் வேகமாக மாறக்கூடும். இவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, பாதுகாப்பையும் வழங்குவதாக கருதப்படும் 8 நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பயணத்தை இலகுவாக்கும் இந்த தொழில்நுட்பங்கள் விரைவில் அனைத்து கார்களிலும் எதிர்பார்க்கலாம்.

01. ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேர்

01. ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேர்

ஸ்மார்ட்போன்களையும், காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் வெகு எளிதாக இணைந்து பல்வேறு பொழுதுபோக்கு, தகவல், வரைபடம் மற்றும் தொடர்பு வசதிகளை பெறுவதற்கான பிரத்யேக அப்ளிகேஷன்களை மொபைல்போன் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதில், தற்போது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய இரு அப்ளிகேஷன்களும் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றன. சமீபத்தில் வந்த மாருதி பலேனோ காரில் ஆப்பிள் கார்ப்ளே அப்ளிகேஷனுடன் வந்துள்ளது. விரைவில் பல நிறுவனங்களும், இந்த ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளே தொழில்நுட்பங்களும் கார்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். உங்களது ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு உங்கள் காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பல்வேறு வசதிகளை பெற முடியும். விரைவில் பல கார்களில் இந்த சாஃப்ட்வேர்களை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

02. புஷ் பட்டன் ஸ்டார்ட்

02. புஷ் பட்டன் ஸ்டார்ட்

சட்டை பாக்கெட்டில் கார் சாவியை வைத்துக் கொண்டே காரை திறப்பதற்கும், அதேபோன்று புஷ் பட்டன் மூலமாக கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், நிறுத்துவதற்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி டிசையர் என பல கார் மாடல்களில் இந்த வசதிகள் இடம்பெற்று விட்டன.

03. பிளைன்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம்

03. பிளைன்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம்

வளைவுகளில் திரும்பும்போது, சில வேளைகளில் காரின் ஏ பில்லர் ஓட்டுனரின் பார்வையை மறைக்கும் அபாயம் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இதனை தவிர்ப்பதற்காக, ஓட்டுனரின் பார்வைக்கு புலப்படாத பொருட்கள் மற்றும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் வசதிதான் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம். சைடு மிரர்களில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலமாக அபாயங்களை உணர்ந்து ஓட்டுனரை எச்சரிக்கும். இதனால், அந்த பகுதியில் கூடுதல் கவனத்துடன் கடக்க முடியும். விலையுயர்ந்த கார்களுக்கான வசதியாக இருந்த நிலை மாறி தற்போது பல இந்திய கார் மாடல்களில் இந்த வசதியை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர்.

04. தடம் மாறுதலை கண்காணிப்பு நுட்பம்

04. தடம் மாறுதலை கண்காணிப்பு நுட்பம்

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தடம் மாறும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சிக்னல் கொடுக்காமல் அல்லது சரியான தடத்தில் நீங்கள் காரை செலுத்தவில்லை என்றால், இந்த தொழில்நுட்பம் ஓட்டுனரை எச்சரிக்கும். இந்த தொழில்நுட்பமும் நடுத்தர வகை கார்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பட்ஜெட் கார் மாடல்களிலும் இடம் பிடிக்கும் என்று நம்பலாம்.

05. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

05. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

இதுவும் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகவும், ஓட்டுனர் ஆசுவாசமாக செல்லவும் உதவுகிறது. சாதாரண க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் கார் செல்லும். முன்னால் பின்னால் வாகனங்கள் வரும்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு தக்கவாறு காரின் வேகத்தை கட்டுப்படுத்தி செலுத்தும் வசதிதான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல். முன்னால் செல்லும் வாகனத்துக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கார் தானாகவே வேகத்தை குறைத்துக் கொள்ளும். இதுவும் ரேடார் மற்றும் சென்சார்கள் உதவியுடன் செயல்படுகிறது.

06. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

06. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

EBD என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம், பிரேக் பவரை அனைத்து சக்கரங்களுக்கும் தேவையான அளவு, சரியான விகிதத்தில் பிரித்து செலுத்தும். அதேபோன்று, இதனுடன் இணைந்து கொடுக்கப்படும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் ஷூக்கள் பூட்டிக் கொள்வதையும், காரின் பவரை விட்டு விட்டு செலுத்தி, டயர்கள் வழுக்குவதை தவிர்க்கிறது. இப்போது பல ஹேட்ச்பேக் கார்களில் இந்த வசதி வந்துவிட்டது.

07. ஏர்பேக்

07. ஏர்பேக்

ஏர்பேக்குகள் விலையுயர்ந்த கார்களுக்கான பாதுகாப்பு அம்சம் என்ற நிலை மிக வேகமாக மாறிவருகிறது. விரைவில் மத்திய அரசு இந்த பாதுகாப்பை நிரந்தரமாக கார்களில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், பட்ஜெட் கார்களில் கூட ஆப்ஷனலாக வழங்கப்படுவதுடன், பல கார்களில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மட்டுமின்றி, சைடு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் ஏர்பேக் நிரந்தர ஆக்சஸெரீயாகும் என்பதில் ஐயமில்லை.

08. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

08. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

காரை பின்புறம் நகர்த்தும்போது, கண்ணுக்கு தெரியாத பொருட்கள் குறித்து ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் எச்சரிக்கை அளிக்கின்றன. முக்கியமாக செடான் மற்றும் எஸ்யூவி கார்களில் இந்த வசதி கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது. முன்னொரு காலத்தில் சொகுசு கார்களுக்கான வசதியாக பார்க்கப்பட்டது. இப்போது ஹேட்ச்பேக் கார்களில் கூட வெளிமார்க்கெட்டில் வாங்கி பொருத்திவிட முடியும்.

சட்டென்று மாறும் வானிலை

சட்டென்று மாறும் வானிலை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலை நாடுகளில் கார்களில் வழங்கப்படும் தொழில்நுட்பங்கள் வியப்பாகவும், அரிதாகவும் இருக்கும். மேலும், அவை இந்திய கார்களில் இடம்பெறுவதற்கும் நீண்ட காலம் எடுத்தது. ஆனால், தற்போது நிலைமை வேகமாக மாறிவருகிறது. இந்திய கார் மார்க்கெட்டின் வளர்ச்சியும், வர்த்தக வாய்ப்புகளும் உலகின் பல நாடுகளையும், நம் நாட்டு பக்கம் இழுத்து வருகிறது. உலகின் எந்த ஒரு மூலையில் கண்டறியப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மிக விரைவாக இந்திய கார்களில் இடம்பிடித்து வருகிறது.

மலிவாகும் தொழில்நுட்பங்கள்

மலிவாகும் தொழில்நுட்பங்கள்

இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர வகை கார்கள்தான் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அதிக தேவை காரணமாக, வளமான வர்த்தக வாய்ப்புகள் சப்ளையர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொண்டிருக்கின்றன. அத்துடன், சந்தைப் போட்டி, அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது மிக மலிவான விலையில், நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றன. எனவே, மேலை நாட்டு சொகுசு கார்களில் இருந்த தொழில்நுட்ப வசதிகளை கண்டு வியந்த நிலை மாறி, தற்போது ரெனோ க்விட் காரிலும், மாருதி ஆல்ட்டோ காரிலும் கூட இந்த நவீன தொழில்நுட்பங்களை பெற முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை.

 
Most Read Articles

English summary
New Technologies Are Shaping The Indian Car Market More Sophisticated.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X