ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

ஃபாஸ்ட்டேக் லேனுக்குள் தவறுதலாக நுழைந்த வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் பற்றிய அதிர்ச்சி தகவலை தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல கட்ட அறிவிப்பிற்கு பின்னர் சமீபத்திலேயே இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஃபாஸ்ட்டேக்கில் இணையாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

மேலும், ஃபாஸ்ட் டேக் இல்லாமல் ஃபாஸ்ட் டேக்கிற்காக ஒதுக்கப்பட்ட ஹைபிரிட் லேனிற்குள் நுழைந்தாலும் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஃபாஸ்ட்டேக் இல்லாமல் தவறுதலாக ஃபாஸ்ட் டேக் லேனுக்குள் நிழைந்த லட்சக் கணக்கான வாகனங்களிடம் இருந்து கோடி கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

டோல்கேட்டுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் விதமாகவே அரசு ஃபாஸ்ட்டேக்கினை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது. அதன்படியே, நாடு முழுவதும் நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

ரொக்கமாக பணம் பரிமாற்றும் செய்யும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை தவிர்க்கவே இத்திட்டத்தைக் அமல்படுத்துவதாக, கண் துடைப்பு கதை அரசின் சார்பில் முன் வைக்கப்பட்டது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

அதற்கேற்ப, நாடு முழுவதும் பல்வேறு டோல்கேட்டுகளில் அதிக வாகன நெரிசல் காணப்பட்டது. இதனை ஃபாஸ்ட்டேக் திட்டத்தின்மூலமே கட்டுப்படுத்த முடியும் என மக்களும் நம்பினர். ஆகையால், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் கொத்துக் கொத்தாக ஃபாஸ்ட்டேக் பயன்பாட்டிற்கு மாறினர்.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

அரசு அறிவித்ததைப் போல் டோல்கேட்டுகளில் எளிதாக கட்டணத்தைச் செலுத்திவிட்டு விரைவில் கடந்துவிடலாம் என அதீத நம்பிக்கை வைத்தனர்.

ஆனால், இது துளியளவும் பலனளிக்கவில்லை. இதனை, ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே மக்கள் உணர்ந்துவிட்டனர்.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

இந்த அவலத்தைவிட கொடுமையானதாக, ஃபாஸ்ட்டேக்கிலும் ஒரு சில மோசடி டோல்கேட் ஊழியர்கள் அதிக கட்டணத்தை எடுத்து கை வரிசை காட்டி வருகின்றனர். இதுகுறித்த புகார்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அளிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கூடுதல் வேதனையளிக்கின்றதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

குறிப்பாக, நகரங்களின் எல்லையோரங்களில் இருக்கும் டோல்கேட்டுகளைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். அது, பல நேரங்களில் இரண்டு 3 மணி நேரங்கள் வரைகூட நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசே பகீரங்கமாக ஒப்புக் கொண்டது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

இருப்பினும், ஃபாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், இதன்மூலம் அதிக கட்டணத்தை வசூல் செய்து, சிறப்பாக கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தவறுதலாக ஃபாஸ்ட்டேக் லேனுக்குள் நுழைந்த 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களிடம் இருந்து இதுவரை அதிகபட்சமாக ரூ. 20 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக வசூலித்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல் (என்எச்ஏஐ) வெளியிட்டுள்ளது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

இது, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) வரை செய்யப்பட்ட கலெக்ஷன் ஆகும். அதேசமயம், மறுபக்கம் ஃபாஸ்ட்டேக்குகளை விற்பனைச் செய்வதன்மூலமும் அரசு சிறப்பாக கல்லா கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, 1.55 ஃபாஸ்ட்டேக்குகள் பலவிதமான விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைச் செய்திருப்பதாக என்எச்ஏஐ தெரிவித்துள்ளது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

தொடர்ந்து, இந்த ஃபாஸ்ட்டேக்குகளின் வழியாக நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு டோல் பிளாசாக்கள் மூலம் நாள் ஒன்றிற்கு ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்து வருகின்றது என்எச்ஏஐ. இது ஃபாஸ்ட்டேக் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு செய்யப்பட்ட வசூலைவிட, தற்போது வசூலிக்கப்படும் தொகை இரு மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.

ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..!

ஆகையால், இந்த ரொக்கமில்லா பண பரிவார்த்தனையை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி, அண்மையில் சலுகை ஒன்றை வழங்கியது. இந்த சலுகையில், இம்மாதம் 29ம் தேதி வரை ரூ. 100க்குள்ளாக இலவசமாக ஃபாஸ்ட்டேக்கை கடந்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும், ஃபாஸ்ட்டேக்கை இலவசமாக குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது அறிவித்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NHAI Collects Rs 20 Crore In Fines From Vehicles Without FASTags. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X