சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

சுங்க சாவடிகளில் கடுமையான நெரிசல் நிலவுவதால், வாகனங்கள் இலவசமாக செல்லும் வகையில், புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை காரணமாக சுங்க சாவடிகளில் தற்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. சுங்க சாவடிகளில் உள்ள லேன்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதுதான் முக்கியமான பிரச்னையாக உள்ளது.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் பாஸ்டேக்கின் முக்கியமான பயன்பாடு. ஆனால் அதற்கு மாறாக தற்போது வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு சில சுங்க சாவடிகளில் வாகனங்கள் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விரக்தியடைகின்றனர்.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

ஒரு சில சுங்க சாவடிகளில் சென்சார்களால் பாஸ்டேக்கை ஸ்கேன் செய்ய முடியவில்லை. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக வாகன ஓட்டிகள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

இந்த புதிய திட்டத்தின் கீழ், சுங்க சாவடிகளில் உள்ள ஒவ்வொரு லேனிலும் வண்ண கோடுகளை வரைவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுங்க சாவடிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கும். வரிசையில் நிற்கும் வாகனங்கள் இந்த கோட்டை தொட்டு விட்டால், டோல்கேட் ஆபரேட்டர் அந்த லேனில் உள்ள பூம் பேரியரை உடனடியாக திறந்து விட்டு விட வேண்டும்.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

அத்துடன் அந்த லேனில் நிற்கும் வாகனங்களை இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த திட்டம் ஆலோசனை அளவில்தான் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கும் பணிகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

அதே சமயம் இந்த புதிய திட்டத்தின் கீழ் வரையப்படும் கோடுகள், சுங்க சாவடிக்கு சுங்க சாவடி மாறுபடலாம் என கூறப்படுகிறது. சுங்க சாவடிகளில் இருந்து எவ்வளவு தொலைவில் இந்த கோடுகளை வரைவது என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட சுங்க சாவடியில் எவ்வளவு லேன்கள் உள்ளது? போன்ற காரணிகள் முக்கியமானதாக இருக்கும்.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

இந்த புதிய திட்டம் மூலம், சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் நீண்ட நேரம் நிற்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு இந்த திட்டம் உதவி செய்யும். ஆனால் இந்த புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...

இதற்கிடையே சுங்க சாவடிகளில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது பாஸ்டேக்கை ஸ்கேன் செய்ய தவறினாலோ வாகனங்களை இலவசமாக கடக்க அனுமதிக்க வேண்டும் என டோல்கேட் ஆபரேட்டர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முயற்சிகள் மூலம் வரும் நாட்களில் நெரிசல் குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NHAI's New Plan To Reduce Congestion At Toll Plazas: Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, February 24, 2021, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X