அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

சென்னையிலிருந்து மைசூருக்கு பெங்களூர் வழியாக அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டம் குறித்த நீண்ட காலமாக செய்திகள் வெளிவருவதும், வந்த வேகத்தில் அடங்கிப் போவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை - மைசூர் அதிவேக ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கழகம் கையில் எடுத்துள்ளது.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

மும்பையிலிருந்து ஆமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் பல்வேறு தடங்கல்களுக்கு இடையில் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்புள்ள நாட்டின் இதர பகுதிகளில் 5 முக்கிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் குழு ஆய்வுகளை நடத்தி உள்ளது.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் ரயில் இயக்குவதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது தேசிய அதிவேக ரயில் கழகம்.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

டெல்லி- ஜெய்ப்பூர்- உதய்பூர்- ஆமதாபாத் (886 கிமீ), மும்பை - நாசிக் - நாக்பூர் (753 கிமீ), டெல்லி - சண்டிகர் - லூதியானா - ஜலந்தர் - அமிர்தசரஸ் (459 கிமீ) மற்றும் மும்பை - புனே - ஹைதராபாத் ( 711 கிமீ) மற்றும் சென்னை - பெங்களூர் - மைசூர் (435 கிமீ) ஆகிய 5 வழித்தடங்கள் புதிதாக கையில் எடுக்கப்பட்டுள்ளன.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

இந்த நிலையில், சென்னை - பெங்களூர் - மைசூர் வழித்தடத்தில் அதிவேக ரயில் இயக்குவதற்கான கட்டமைப்பை வடிவமைத்து கொடுப்பதற்காக தேசிய அதிவேக ரயில் கழகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த டென்டர் ஒதுக்கீடு இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

புல்லட் ரயில் பாதையை இறுதி செய்வது, ஏற்கனவே இருக்கும் ரயில் வழித்தடத்தை ஒட்டி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழியில் உள்ள பாலங்கள், வனப் பகுதி, புவியியல் அமைப்பு ஆகியவை ஆய்வு செய்து புல்லட் ரயில் வழித்தடத்திற்கான முதல் கட்ட கட்டமைப்பு வரைவு டென்டர் பெறும் நிறுவனம் சமர்ப்பிக்கும்.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

இதனால், இந்த அதிவேக ரயில் திட்டம் சூடுபிடிக்கத் துவங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த முறையாவது இந்த திட்டம் முழு முனைப்புடன் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

தென் இந்தியாவின் முக்கிய நகரங்களாக விளங்கும் சென்னை - பெங்களூர் - மைசூர் இடையிலான அதிவேக ரயில் திட்டம் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் பணிபுரிபவர்கள் வார இறுதியில் தம் தம் சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே மணிக்கு 300 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படும் பட்சத்தில், அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்தில் இணைந்துவிட முடியும். இது இரு நகரங்களுக்கு இடையே வாரம் தோறும் பயணிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

அப்பாடா... ஒருவழியாக சூடுபிடிக்கும் சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் திட்டம்!

ஆனால், புல்லட் ரயில் திட்டம் எதிர்பார்த்த அளவு பயன் தராது என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த வழித்தடத்தில் டிரெயின் 18 போன்ற நவீன வகை ரயில்களை இயக்குவதன் மூலமாக பயண நேரத்தை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
NHSRC has invited bids to design Chennai - Bengaluru - Mysore high speed rail line.
Story first published: Thursday, February 13, 2020, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X