புதிய அதிரடி... இவுங்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

விசா வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

இந்தியாவின் பல்வேறு நகரங்களில், மிக அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவும் ஒன்று. லூதியானா நகரம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு பெயர் பெற்றது. அங்கு ஏராளமானோரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் இருக்கின்றன. அதே சமயம் அங்கு சாலை விபத்துக்களும் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

லூதியானா நகரில் கடந்த 2017ம் ஆண்டு சாலை விபத்துக்கள் காரணமாக 281 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 328 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அங்கு 477 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. எனவே சாலை விபத்துக்களை குறைக்க லூதியானா போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கனடா, ஆஸ்திரேலியா விசாக்கள் வழங்கப்படாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. லூதியானாவை சேர்ந்த பலர் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் அவர்கள் செய்த போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இந்த 2 நாடுகளின் தூதரகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். கனடா மற்றும் ஆஸ்திரேலியா தூதரங்களை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டாகவே ஒவ்வொரு மாதமும் லூதியானா போலீசாரிடம் இந்த விபரங்களை பெற்று வருகின்றனர்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

லூதியானா போலீஸ் கமிஷனர் ராகேஷ் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''டிரைவர்கள் செய்த போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பான விபரங்கள் எங்களிடம் டிஜிட்டல் வகையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விபரங்களை எங்களால் பகிர்ந்து கொள்ள முடியும்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

லூதியானாவை சேர்ந்த பலர் நீண்ட கால விசா பெறுவதற்காகவோ அல்லது குடியுரிமை பெறுவதற்காகவோ கனடா மற்றும் ஆஸ்திரேலிய தூதரங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க எங்களால் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். லூதியானாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

இந்த நகரின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார். லூதியானா போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மற்ற நகரங்களையும் இதனை பின்பற்றலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

இதுகுறித்து பஞ்சாப் அரசுக்கான போக்குவரத்து ஆலோசகர் நவ்தீப் ஆசிஜா கூறுகையில், ''இது அருமையான நடவடிக்கை. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், வாகன ஓட்டிகளிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் இது உதவும். பஞ்சாப்பை சேர்ந்த பலர் நீண்ட கால விசா அல்லது குடியுரிமைக்காக இந்த நாடுகளிடம் விண்ணப்பித்து வருகின்றனர்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

எனவே இந்த திட்டம் நல்ல விதமான தாக்கத்தை உண்டாக்கும்'' என்றார். இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டமும் இதற்கு ஒரு உதாரணம்.

புதிய அதிரடி... இவர்களுக்கு எல்லாம் இனி கண்டிப்பா விசா கொடுக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Canada, Australia Visas For Traffic Violators: Ludhiana Police. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X