டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

அரசு தற்போது அதிரடி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்பது போன்ற அறிவிப்புகளை நீங்கள் இதற்கு முன் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு தற்போது வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இந்தியாவில் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காற்று மாசுபாடு பிரச்னைக்கு, வாகனங்கள் உமிழும் புகை முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காகதான் தற்போது அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இந்த புதிய உத்தரவின்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (Pollution Under Control Certificate - PUCC) கட்டாயம். இந்த சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படாது. வரும் அக்டோபர் 25ம் தேதியில் (October 25) இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

டெல்லி அரசுதான் தற்போது இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவேதான் அங்கு காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக இந்த அதிரடியான முடிவை அரசு தற்போது கையில் எடுத்துள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

டெல்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இந்த புதிய விதிமுறையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் டெல்லி அரசு கடந்த செப்டம்பர் 29ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில்தான், இந்த அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இந்த புதிய விதிமுறையை எப்படி அமல்படுத்துவது? என்றெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ''டெல்லியில் மாசுபாடு அதிகரித்து கொண்டே வருவதற்கு வாகன உமிழ்வு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதை உடனடியாக குறைத்தாக வேண்டிய கட்டாயம்.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

எனவே வரும் அக்டோபர் 25ம் தேதியில் இருந்து, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு, பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படாது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக டெல்லி அரசு சமீப காலமாக வாகன ஓட்டிகளிடம் கடுமையாகவே நடந்து கொள்கிறது. இதற்கு முன்னதாகவே இந்த பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்துள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்கும் விஷயத்திலும் டெல்லி அரசு தற்போது கடுமை காட்ட தொடங்கியுள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு வரும் அக்டோபர் 25ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் நிரப்ப கூடாது என்ற உத்தரவையும் டெல்லி அரசு தற்போது பிறப்பித்துள்ளது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வரும் என்று டெல்லி அரசு நம்புகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களுடன் சேர்த்து, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

டார்கெட் பண்ணீட்டாங்க... இனி வண்டிக்கு இது இல்லேனா அவ்ளோதான்... அதிரடி உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

குறிப்பாக அதிகப்படியான எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர டெல்லி அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களும் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No fuel without pucc from october 25
Story first published: Monday, October 3, 2022, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X