கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

கொரோனிவிற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட நகரத்தின் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா இந்தியாவில் தற்போதே அதன் தீவிரத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுபடுத்துவது அரசின் கடமையாக மட்டுமின்றி நம்முடைய தலையாய கடமையாகவும் இருக்கின்றது.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

கொரோன வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள குறிப்பிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்தாலே போதுமானது.

இந்த வைரஸ் குறிப்பாக மனிதர்களின் சுவாச மண்டலத்தையே முக்கிய இலக்காக வைத்து தாக்குவதால் முக கவசம் அணிவது கட்டாயமானதாக இருக்கின்றது.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

மேலும், கைகள் மற்றும் கண்கள் வழியாகவும் இந்த வைரஸ் நம்மை தாக்குவதால் கையுறை அல்லது கிருமி நாசினி போன்றவற்றையும் அவசியமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கோரானவின் தீவிரத்தைப் பற்றி அறியாமல், அத்தியாவசியமான மாஸ்க்கைக் கூட அணியாமல் வளம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

மேலும், 144 தடை உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஆங்காங்கே சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், இருசக்கர வாகனங்களில் இளைஞர்களைப் போலீஸார், சற்று தயங்காமல் லத்தி சார்ஜ் செய்து வருகின்றனர். போலீஸாரின் இந்த அத்துமீறலால் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலே நிலவு வருகின்றது. ஆகையால், தற்போது வாகன ஓட்டிகளுக்கு கொரோனா அச்சத்தைக் காட்டிலும் போலீஸாரின் லத்தி சார்ஜ் குறித்த அச்சமே அதிகம் உள்ளது.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

இந்நிலையில், முககவசம் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் பங்க் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனி பெட்ரோல் வழங்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான அறிவிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருக்கும் சூரத் நகரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

மக்களை கொரோனாவில் இருந்து காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது.

இதற்கான முடிவை குஜராத் பெட்ரோவ் பங்க் விநியோகஸ்தர் சங்கம் எடுத்துள்ளது. இந்த உத்தரவுடன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது குறிப்பிட்ட இடைவெளியை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

MOST READ: சீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

தொடர்ந்து, பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பணத்தை வாங்குவது மற்றும் வாடிக்கையாளர்களை கையாள்வது உள்ளிட்டவற்றில் சில கட்டுபாடுகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

MOST READ: சகல வசதிகளுடன் ஓர் அசத்தலான ஸ்மார்ட் ஹெல்மெட்!

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

இதுகுறித்து குஜராத் மாநிலத்தின் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தேசாய் கூறியதாவது, "பெட்ரோல் பம்புகள் அத்தியாவசிய பொருட்களின் கீழ் வருகின்றன. தற்போது, நகரம் வைரஸின் பிடியில் சிக்கியிருக்கின்றது. தூய்மை மற்றும் சுகாதாரத்தின் அம்சத்தை நாம் புறக்கணிக்க முடியாது. இதனால், முகமூடி பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற திட்டத்தை அனைத்து பெட்ரோல் பங்குகளும் ஒருமனதாக முடிவு செய்திருக்கின்றன" என்றார்.

MOST READ: 1200கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள்! போலீசுக்கே இது செம்ம ஷாக்

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த இரண்டு நாட்களாக இந்த கட்டாய விதியை நாங்கள் கடைபிடித்து வருகின்றோம். இந்த விதி பைக் மட்டுமின்றி பெட்ரோல் பம்புகளுக்கு வருகை தரும் கார் உரிமையாளர்களிடம் நாங்கள் கடைபிடித்து வருகின்றோம். வாகனத்தில் எரிபொருள் நிரப்பும்போது கார் உரிமையாளர்கள் வெளியே வரவதற்குகூட நாங்கள் அனுமதிப்பதில்லை. அவர்களை காருக்குள்ளேயே அமருமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.

கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..!

இதுதவிர பெட்ரோல் பங்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு வைரஸ் தொற்றும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, கார்டு மூலம் பணம் செலுத்தும் கருவி மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றில் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டு தூய்மைச் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Mask No Petrol In Surat. Read In Tamil.
Story first published: Sunday, March 29, 2020, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X