18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

ஆர்டிஓ-வில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவரிக்கும் விதமாக சில முக்கிய சேவைகளை ஆன்லைனுக்கு மத்திய அரசு மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்றை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு குறிப்பிட்ட சில சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, பல்வேறு முக்கிய சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

முகவரி மாற்றுவது, ஆவண நகல் கோருவது, சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது என பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறியிருக்கின்றன. இந்த மாற்றத்தால் டெல்லியில் உள்ள ஆர்டிக்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைதந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பெருவாரியான ஆர்டிஓ சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றுவதனாலேயே கூட்ட நெரிசல் குறைந்து காணப்படுவதாகக் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றன.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

டெல்லி அரசு, மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும் மக்களைக் காக்கும் நோக்கிலேயே இணைய வழி ஆர்டிஓ சேவைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், டெல்லி அரசு மேற்கொண்ட இதே நடவடிக்கையை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

ஆன்லைன் வழி ஆர்டிஓ சேவையை நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிவித்திருக்கின்றது. மக்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

ஆகையால், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வாகன பதிவு என பல முக்கிய சேவைகளுக்குக்கூட ஆர்டிஓ செல்வது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இச்சேவையைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆதார்டு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆர்டிஓ செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டிருக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

18 வகையிலான சேவைகள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சிலவற்றைப் பட்டியலாக கீழே பார்க்கலாம்.

 • கற்போருக்கான உரிமம்.
 • நகல் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தல்.
 • ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற
 • சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெறுவதற்கு
 • ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்
 • மோட்டார் வாகனத்திற்கான தற்காலிக பதிவெண்ணிற்காக விண்ணப்பித்தல்.
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
 • பதிவு செய்த வாகனத்திற்கான நகல் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தல்.
 • பதிவு சான்றிதழை பெற என்ஓசி சான்றுக்காக விண்ணப்பித்தல்
 • மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
 • மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்
 • பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற தகவல் சேர்த்தல்
 • முழுமையாக கட்டப்பட்ட உடலமைப்பைக் கொம்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பது, என பல்வேறு முக்கிய செயல்கள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

இதில் எந்த சேவையை நாம் பெற வேண்டுமானாலும் ஆதார் கார்டு முக்கியம். இதன் வாயிலாக சாரதி ஆன்லைன் தளத்தில் முதில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, முதலில் ஆதார்டு கார்டை வைத்து லாக்-இன் செய்ய வேண்டும். பின்னர், அறிவிக்கப்பட்டிருக்கும் எந்த சேவையை வேண்டுமானாலும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Need To Visit RTO - 18 Important RTO Services Move To Online: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Friday, March 5, 2021, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X