இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தலைப்பை படித்தவுடன், ஹேட்ச்பேக் என்பது தவறுதலாக நோட்ச்பேக் என எழுதப்பட்டு விட்டது என நினைத்து விடாதீர்கள். இப்படியும் ஒரு வகை கார் இருக்கிறது.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் வாங்க செல்லும் ஒருவர் முதலில் யோசிக்கும் விஷயம், என்ன பாடி ஸ்டைல்? என்பதுதான். இந்தியாவை பொறுத்தவரை, ஹேட்ச்பேக், எஸ்யூவி மற்றும் செடான் போன்ற ரக கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை அனைத்தும் கார்களின் பாடி ஸ்டைல் ஆகும். பாடி ஸ்டைலை பொறுத்து, ஹேட்ச்பேக், எஸ்யூவி, செடான் என கார்கள் வரையறுக்கப்படுகின்றன.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உதாரணத்திற்கு மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்றவை ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் போன்றவை எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களாக உள்ளன. செடான் ரக கார்களுக்கு மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதிலும் கூட பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. அதாவது ஹேட்ச்பேக் என்றால், எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மற்றும் பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. அதே சமயம் எஸ்யூவி என்றால், காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி என நிறைய உட்பிரிவுகள் வருகின்றன.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

செடான் ரக கார்களை பொறுத்தவரை, காம்பேக்ட் செடான் மற்றும் மிட்-சைஸ் செடான் போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இன்னும் பிக்-அப் மற்றும் லிமோசின் என நிறைய பாடி ஸ்டைல்கள் இருக்கின்றன. இதில், லிமோசின் கார்கள் மிகவும் நீளமாக இருக்கும். லிமோசின் ரக கார்களில் சொகுசு வசதிகள் நிரம்பியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே உலக தலைவர்கள் பலரும், தொழில் அதிபர்களும் லிமோசின் ரக கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆட்டோமொபைல் செய்திகளை தவறாமல் படிப்பவர்களுக்கு, இந்த பாடி ஸ்டைல்கள் பற்றிய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் கூட அதிகம் கேள்விப்படாத ஒரு வார்த்தை நோட்ச்பேக் (Notchback).

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஹேட்ச்பேக் தெரியும், அது என்ன நோட்ச்பேக் என்கிறீர்களா? நோட்ச்பேக் என்பதும் ஒரு வகையான கார் பாடி ஸ்டைல்தான். ஆனால் இந்த வார்த்தை தற்போது அதிகமாக புழக்கத்தில் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நோட்ச்பேக் ரக கார்களை சாலையில் மிகவும் அதிகமாக பார்க்க முடியும்.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக 1960கள் முதல் 1980கள் வரை அமெரிக்கா போன்ற நாடுகளில் நோட்ச்பேக் கார்கள் மிகவும் அதிகளவில் இருந்தன. ஆனால் இன்றைய கால கட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் நோட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்கள் வருகின்றன.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இன்னும் சொல்லப்போனால் நோட்ச்பேக் என்ற வரையறைக்கு மிகவும் துல்லியமாக பொருந்த கூடிய கார்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் வெளி வருகின்றன. ஆம், உண்மையில் சொல்வதென்றால், நோட்ச்பேக் என்ற ரகத்திற்கு துல்லியமான வரையறை எதுவும் இல்லை. அதாவது எஸ்யூவி ரக கார்கள் என்றால், இந்த வடிவத்தில் இருக்கும் என்ற ஒரு வரையறை இருக்கும்.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் நோட்ச்பேக் ரக கார்களுக்கு அவ்வாறான துல்லிய வரையறை எதுவும் இல்லை என்றாலும், ஒரு சில வரையறைகளை ஆட்டோமொபைல் துறையினர் முன் வைக்கின்றனர். அதாவது காரின் பின் பகுதியானது, முன் அல்லது பின் பக்க பாகங்களை விட மிகவும் குறுகியதாக இருந்தால், அதனை நோட்ச்பேக் கார் என்கின்றனர்.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அல்லது பின் பக்க விண்டோவானது, பெரும்பாலான மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் நிமிர்ந்த அல்லது நேரான நிலையில் பொஷிஷன் செய்யப்பட்டிருந்தாலும் அதனை நோட்ச்பேக் ரகத்திற்குள் கொண்டு வந்து விடுகின்றனர். ஆனால் துல்லியமான வரையறை இல்லாத காரணத்தால், ஒரு சில செடான் ரக கார்களை துல்லியமாக வரையறுக்க நோட்ச்பேக் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.

இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்து வரும் டாடா டிகோர் கார் இதற்கு ஒரு உதாரணம். இதனை செடான் என்றும், நோட்ச்பேக் என்றும் வரையறுக்கின்றனர். செடான் நோட்ச்பேக் என்றும் கூட டாடா டிகோர் கார் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பொதுவாக பார்த்தால், கார்களின் பாடி ஸ்டைலில் நோட்ச்பேக் என்பது மிகவும் குறைவாக குறிப்பிடப்படும் பதமாக மாறி விட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Notchback body style car heres everything you need to know
Story first published: Thursday, September 23, 2021, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X