பிறந்த தேதியில் மறைந்துள்ள ரகசியம்... நியூமரலாஜிப்படி நீங்க எந்த கலர் வண்டியை ஓட்டணும் தெரியுமா?

புதிய கார் (Car), பைக் (Bike) அல்லது ஸ்கூட்டரை (Scooter) வாங்கும்போது, எந்த கலரை (Colour) தேர்வு செய்வது? என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் எண் கணிதம் எனப்படும் நியூமரலாஜி (Numerology) மூலம், உங்கள் கனவு வாகனத்தின் கலரை மிகவும் எளிமையாக தேர்வு செய்யலாம்.

இதற்காக நீங்கள் நியூமரலாஜி வல்லுனர்களிடம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் பிறந்த தேதியை (Birth Date) மட்டும் வைத்து கொண்டு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை (Luck) தேடி தரும் வாகனத்தின் கலரை நீங்களே எளிதாக கண்டுபிடித்து விடலாம். அது எப்படி? என்பதைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் அடிப்படையில் கலரை தேர்வு செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் பிரச்னைகள் ஏற்படலாம் என்பது நியூமரலாஜி வல்லுனர்களின் கருத்து.

பிறந்த தேதியில் மறைந்துள்ள ரகசியம்... நியூமரலாஜிப்படி நீங்க எந்த கலர் வண்டியை ஓட்டணும் தெரியுமா?

நம்பர் 1

நீங்கள் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால், உங்களின் அடிப்படை எண் 1. கோல்டன் யெல்லோ மற்றும் காப்பர் ஆகிய கலர்கள் உங்களுக்கு சாதகமானவையாக இருக்கும். கருப்பு மற்றும் டார்க் ப்ளூ கலர்களை நீங்கள் தேர்வு செய்து விட வேண்டாம் என நியூமரலாஜி வல்லுனர்கள் கூறுகின்றனர். இங்கே அடிப்படை எண்ணை எப்படி கணக்கிடுவது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

மற்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்ட நிறங்களை பார்ப்பதற்கு முன்பு அதை தெளிவுபடுத்தி விடுகிறோம். இங்கே 28 என்ற தேதியை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம். முதலில் 2 மற்றும் 8 ஆகிய எண்களை கூட்ட வேண்டும். 2 + 8 = 10. பின்னர் இந்த 10 என்ற எண்ணையும் தனித்தனியாக பிரித்து கூட்ட வேண்டும். அதாவது 1 + 0 = 1. எனவே உங்களின் அடிப்படை எண் 1.

இப்போது நாம் பார்த்தது இரட்டை இலக்க எண் ஆகும். அதுவே ஒற்றை இலக்க எண் என்றால், அதுவேதான் உங்களின் அடிப்படை எண்ணாக கருதப்படும். அதாவது 1 என்றால், அதுவே உங்களின் அடிப்படை எண் (1 + 0 = 1). 2 என்றாலும் அதுவே உங்களின் அடிப்படை எண் (2 + 0 = 2). 1 முதல் 9 வரை உள்ள ஒற்றை இலக்க எண்களில் நீங்கள் பிறந்திருந்தால், அவைதான் உங்களின் அடிப்படை எண்கள் ஆகும்.

நம்பர் 2

அடிப்படை எண்ணை எப்படி கணக்கிடுவது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். சரி, இனி நம்பர் 2 உங்களுக்கு அடிப்படை எண்ணாக இருந்தால், எந்தெந்த கலர்கள் சாதகமானதாக இருக்கும் என பார்க்கலாம். 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 2 ஆக இருக்கும். உங்களுக்கு வெள்ளை, பச்சை மற்றும் க்ரீம் கலர்கள் சாதகமாக இருக்கும். கருப்பு, நீலம் மற்றும் சிகப்பு ஆகிய கலர்களை தேர்வு செய்ய வேண்டாம்.

நம்பர் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 3. உங்களுக்கு மஞ்சள், கருப்பு மற்றும் லைட் ப்ளூ ஆகிய கலர்கள் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என நியூமரலாஜி வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நம்பர் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 4 ஆகும். நீங்கள் உங்கள் வாகனத்திற்கு க்ரீம் கலரை தேர்வு செய்யலாம். நீலம் மற்றும் காக்கி ஆகிய கலர்களை நீங்கள் தேர்வு செய்ய கூடாது என நியூமரலாஜி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்பர் 5

5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 5 ஆகும். வெள்ளை, காக்கி மற்றும் கோதுமை கலர் ஆகியவை உங்களுக்கு சாதகமாக இருக்குமாம்.

நம்பர் 6

6, 15, 24 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களின் அடிப்படை எண் 6. லைட் ப்ளூ மற்றும் லைட் ரோஸ் ஆகிய கலர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்கிறார்கள். நீங்கள் டார்க் ப்ளூ மற்றும் சிகப்பு நிறத்தை தேர்வு செய்ய வேண்டாம்.

நம்பர் 7

7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 7 ஆகும். லைட் க்ரீன், மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகியவை உங்களுக்கு சாதகமான நிறங்கள் ஆகும்.

நம்பர் 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 8. நீலம் மற்றும் கோதுமை கலர்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

நம்பர் 9

9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களின் அடிப்படை எண் 9. ரோஸ் மற்றும் டார்க் ரெட் ஆகிய கலர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்பது நியூமரலாஜி வல்லுனர்களின் கருத்து.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Numerology birth date vehicle colour luck
Story first published: Saturday, December 3, 2022, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X