ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ்

வாகனங்களை அழகுப்படுத்துவதும், அதிக வசதிகளுடன் மாற்றுவதும் நவீன கால ஆயக்கலையாக மாறி இருக்கிறது. அவ்வாறு மாற்றப்பட்டும் சில வாகனங்கள் எதிர்பார்ப்பை விஞ்சிய அம்சங்களுடன், தனித்துவத்தையும் பெற்றுவிடுகின்றன. அந்த வகையில், 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதை பரைசாற்றும் விதமாக, 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ் ஒன்றை நினைத்து பார்க்க முடியாத வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சிலிர்க்க வைக்கும் அந்த பஸ்சின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை படங்களுடன் பார்க்கலாம்.

ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

ஆச்சர்யம்

புதிய வாகனத்தை வாங்கும்போதே கஸ்டமைஸ் செய்வது அல்லது சில ஆண்டுகள் ஆன வாகனங்களை கஸ்டமைஸ் செய்வது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், நாம் பார்க்கப்போகும் பஸ் 1964ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல் என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

கேரள மாநிலம், எர்ணாக்குளம் அருகே உள்ள நெல்லிக்குழி பகுதியை சேர்ந்த OJES ஆட்டோமொபைல் நிறுவனம் இந்த பஸ்சை கஸ்டமைஸ் செய்யும் பணிகளை ஏற்றுக் கொண்டு வேற லெவலுக்கு மாற்றிக் காட்டியுள்ளது.

ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

உரிமையாளர் யார்?

சரி, இந்த பஸ்சின் உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஒரு சாமியார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சின்ன ஜீயர் என்ற சாமியாருக்கு சொந்தமானதுதான் இந்த பழைய டாடா பஸ். இதனை எல்லோரும் திரும்பி பார்க்க வைக்கும் அம்சங்களுடன் பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். ஆனால், பஸ் பழமையானதாக இருந்தாலும், புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு உட்புறத்தில் உல்லாச கப்பல் போன்ற வசதிகளுடன் மாற்றி உள்ளனர்.

ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

பஸ் மாடல் விபரம்

1964ம் ஆண்டு டாடா 1210 டி என்ற பஸ் மாடலின் சேஸீ, எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவை தக்கவைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அசோக் லேலண்ட் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த பஸ்.

ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

அசோக் லேலண்ட் பாகங்கள்

அதேபோன்று, அசோக் லேலண்ட் பஸ் மாடல்களின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டாடா 1200 பஸ்சின் சில முக்கிய பாகங்களுடன் இந்த பஸ் தொழில்நுட்ப அளவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

டிவிஎஸ் கைவண்ணம்

1984ம் ஆண்டு இந்த பஸ்சின் பாடியை மதுரை டிவிஎஸ் லிமிடேட் நிறுவனம் மாற்றியது. பழைய பாடியை எடுத்துவிட்டு புதிதாக பாடி கட்டி கொடுத்தது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரள நிறுவனம் மூலமாக மீண்டும் மறுபிறப்பு எடுத்துள்ளது.

 ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

டிவிஎஸ் பரிந்துரை

சின்ன ஜீயர் சாமியாரின் பயணத் தேவைகளை தெரிந்து கொண்ட டிவிஎஸ் நிறுவனம் கேரளாவை சேர்ந்த ஓஜஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்பிறகே, அங்கு வைத்து மீண்டும் கஸ்டமைஸ் பணிகள் செய்யப்பட்டன.

 ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

ராஜ இருக்கைகள்

சின்ன ஜீயர் சாமியாருக்கு தனியாக ஒரு ராஜ இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அவருடன் பயணிப்பவர்களுக்காக மேலும் 6 இருக்கைகளுடன் உட்புறம் நட்சத்திர விடுகளுக்கு ஒப்பான அம்சங்களுடன் கேரவனாக மாற்றப்பட்டுள்ளது.

 ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

கவரும் தோற்றம்

பஸ்சின் வெளிப்புறத்திற்கு அடர் பச்சை மற்றும் சில்வர் வர்ண பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலடியில் உள்ள சங்கரா கல்லூரியை சேர்ந்த ஓவியக்கலை ஆசிரியர்கள் இந்த பஸ்சிற்கான வெளிப்புற வர்ண வேலைப்பாடுகளை செய்துள்ளனர். தற்போதும் இந்த பஸ் நல்ல கண்டிஷனில் பயன்பாட்டில் இருப்பதை சுவாமிஜியை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது உறுதிப்படுத்தினார்.

 ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

நல்ல கண்டிஷன்

இப்போது வரும் வாகனங்கள் ஷோரூமிலிருந்து எடுத்து சில நாட்களில் கூட பிரச்னை கொடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் முறையான பராமரிப்பு இருக்கும்போது வாகனங்கள் எந்தளவுக்கு நீடித்து உழைக்கும் என்பதற்கு இந்த டாடா பஸ்சும் ஒரு சான்றாக அமைகிறது. மேலும், வாகனங்களை எந்த அளவு அவர்கள் நேசிக்கின்றனர் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Kerala based Ojes automobiles company has restored 1964 Tata 1200D bus like a luxury yacht. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X