தீ பிடித்த ஓகினாவா ஷோரூம்... காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம்... அப்ப வேற என்ன?

மங்களூருவில் ஓகினாவா விற்பனையகம் தீ பிடித்து எரிந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனம் மீது அச்சமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன குறித்த தீ விபத்து செய்து எது வந்தாலும் தற்போது அது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரு, நாக்கூரி பகுதியில் உள்ள ஓகினவா எலெக்ட்ரிக் வாகன விற்பனையகம் ஒன்று சமீபத்தில் தீ பிடித்து எரிந்தது. சம்பவம் அதிகாலை 7 மணி நடந்துள்ளது. இந்த விற்பனையகத்தை நடத்தி வருபவர் ஹமீது, ஸ்மார்ட் சிட்டி மோட்டார் என்ற பெயரில் இந்த விற்பனையகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது விற்பனையகத்தின் மாடியிலேயே குடியிருக்கிறார். கீழ் தளத்தில் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் அவர் வீட்டில் கரெண்ட் அடிக்கடி ட்ரிப் ஆகியுள்ளது. மழை காரணமாக ஏதாவது சிக்கல் இருக்கலாம் என நினைத்துள்ளார். இந்நிலையில் காலை 7 மணிக்குக் கீழே உள்ள விற்பனையைகத்திலிருந்து புகை வந்துள்ளது.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து வெளியே வருவதற்குள் புகை அதிகரித்து நெருப்பாக மாறியுள்ளது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பின்னர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பரபரப்பிற்குள்ளக்கியது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன விற்பனையகம் என்பதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏதாவது தீ பிடித்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதலில் அச்சம் ஏற்பட்டது.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

பின்னர் நடந்த விசாரணையில் இது மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையகம் தீப்பிடித்து எரிவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளித்த ஓகினாவா நிறுவனம் நடந்த சம்பவத்திற்கு எலெக்ட்ரிக் ஷாட் சர்க்யூட் தான் காரணம் எனவும் ஸ்கூட்டர்களில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஓலா, ப்யூர் இவி, ஜித்தேந்திரா இவி, ஓகினவா, பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஸ்கூட்டர்கள் பல இடங்களில் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து எல்லாவற்றையும் செக் செய்தனர்.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

இந்த விவகாரம் குறித்து அரசே நேரடியாக விசாரிக்கத் துவங்கியது. டிஆர்டிஓ குழுவினர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பேட்டரியின் அமைப்பு காரணமாகவே விபத்து நடத்திருக்கலாம் என அறிக்கை கூறியுள்ளனர். இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டுக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

தீ பிடித்த ஓகினாவா ஷோரூம் . . . காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம் . . . அப்ப வேற என்ன ?

இந்நிலையில் அரசு எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான புதிய தரக் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று டாடா நெக்ஸான் இவி கார் ஒன்று தீ பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Okinawa electric scooter dealership fired in mangaluru
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X