பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

இந்தியாவில் மொபைல் ஆப்ஸ் மூலம் கேப் சர்வீஸ் செய்து வரும் ஓலா நிறுவனம் தற்போது சிறு தொழிற்நுட்ப கோளாறை சந்தித்து வருகிறது.

By Balasubramanian

இந்தியாவில் மொபைல் ஆப்ஸ் மூலம் கேப் சர்வீஸ் செய்து வரும் ஓலா நிறுவனம் தற்போது சிறு தொழிற்நுட்ப கோளாறை சந்தித்து வருகிறது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

பெங்களூரை சேர்ந்த ரோஹித் மெண்டா என்பவர் பெங்களூருவில் இருந்து வடகொரியாவில் உள்ள ஒரு நகருக்கு கேப் புக் செய்ய முயற்சித்துள்ளார். ஓலா ஆப் அதை அங்கீகரித்தது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

மேலும் ரோஹித் மெண்டாடவிற்கு கொரிய செல்வதற்கான கார் மற்றும் டிரைவரின் விபரங்கள், புறப்படும் நேரம், ஓ.டி.பி., போன்ற விபரங்களையும் வழங்கியுள்ளது. மேலும் வடகொரியா செல்வதற்கான தொகை 1,49,088 எனவும் தகவல் அனுப்பியுள்ளது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

இந்த விபரங்களை தனது டுவிட்டரில் பதிவிட்ட ரோஹித் மெண்டா அது எவ்வாறு சாத்தியம் என ஓலா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொழிற்நுட்ப கோளாறால் நடந்த தவறு என்றும், இது குறித்த தகவல் சம்மந்தப்பட்ட குழுவிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஓலா நிறுவனம் இதற்கு பதில் அளித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

இந்த டுவிட்டர் பதிவை கண்ட பலர் தங்கள் ஓலா ஆப் முலம் வெளிநாடுகளுக்கு கார் புக் செய்து அதற்கு வந்த பதிலை டுவிட்டரில் பதிவு செய்தனர். எனினும் ஓலா தொழிற்நுட்ப குழு உடனடியாக செயல்பட்டு தொழிற்நுட்ப கோளாறை சரி செய்துள்ளது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

நாம்மில் பலருக்கு வெளிநாடு செல்வது கனவாக இருக்கும் நிலையில் ஓலாவில் வெளிநாட்டிற்கு கேப் புக் செய்தாவது சந்தோப்பட்டுகொள்ளலாம் போல.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

இது போன்று சில நாட்களுக்கு முன்பு உபேர் மொபைல் ஆப்பில் கேப் புக் செய்யும் போது கேப் அரபிக் கடலில் இருப்பது போன்று தகவல் அளித்த சம்பவம் சமீபத்தில் பெரும் வைரலானது.

பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்ல 1.49 லட்சம், ஓலா ஆப்பில் குளறுபடி

தொடர்ந்து இது போன்ற தொழிற்நுட்ப கோளாறுகளை ஆன்லைன் கேப் நிறுவனங்கள் சந்தித்து வருவது வாடிக்கையாகளர்கள் மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Person Books Ola Cabs From Bangalore To North Korea; Gets Billed Rs 1.49 Lakh. Read in Tamil.
Story first published: Tuesday, March 20, 2018, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X