"ஏய் எப்புட்றா?”... இப்படியொரு பஜாஜ் ஸ்கூட்டரை உலகத்தில் எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க!! வேற லெவல்

பைக் மாடிஃபிகேஷன்களுக்கு ஒரு சமயத்தில் கேரளா தான் செம்ம ஃபேமஸாக இருந்தது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளினாலும், அபராத தண்டனைகளாலும் கேரளாவில் ஓரளவிற்கு பைக் மாடிஃபிகேஷன்கள் குறைந்துவிட்டன. பைக் மாடிஃபிகேஷன்களில் கேரளா ஒரு ரகம் என்றால், பஞ்சாப் வேறொரு ரகம். அதாவது பஞ்சாப் காரர்கள் முடியவே முடியாது என்றிருக்கும் விஷயங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பர்.

இதற்கு உதாரணங்களாக பல சம்பவங்களை முந்தைய காலங்களில் பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஒன்று ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி தரத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் தற்போது மற்றொரு மாடிஃபிகேஷன் பஞ்சாப்பில் இருந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. malkitbaj_wa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான முறையில் ஸ்டேரிங் சக்கரம் பொருத்தப்பட்ட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை காணலாம்.

அதாவது, வழக்கமாக இருக்க வேண்டிய ஸ்கூட்டரின் ஹேண்டில்பார் பகுதியில் ஸ்டேரிங் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஸ்கூட்டர் குறித்த சில ரீல் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. காரின் ஸ்டேரிங் சக்கரம் மட்டுமின்றி இந்த குறிப்பிட்ட மாடிஃபை பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் காரின் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. சேத்தக் என்ற பெயரில் தற்சமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஆனால் இந்த செய்தியில் நாம் பார்த்து கொண்டிருப்பது முன்பு விற்பனையில் இருந்த பழைய சேத்தக் ஸ்கூட்டராகும். மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன் பணிகளை பார்த்தோமேயானால், இந்த ஸ்கூட்டரை இயக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம் போன்றே தோன்றுகிறது. இன்னும் சொல்ல போனால், இதனை உருவாக்கியவருக்கே இந்த ஸ்கூட்டரை இயக்க பழகுவதற்கு சில நாட்கள் தேவைப்பட்டிருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டரில் ஃபயர் எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளதையும் மேற்கூறப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண முடிகிறது.

இப்படியொரு பஜாஜ் ஸ்கூட்டரை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?

அதாவது, சேத்தக் ஸ்கூட்டரின் வழக்கமான எக்ஸாஸ்ட் குழாய் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அதன் வேலையை செய்ய இரும்பு குழாய் ஒன்று முன் சக்கரத்திற்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாயின் இரு முனைகளில் இருந்தும் புகை வெளிவருகிறது. பழைய சேத்தக் ஸ்கூட்டர் தற்போதைய ஸ்கூட்டர்களை காட்டிலும் அதிகளவில் புகையை கக்கும் என்பது அதனை பயன்படுத்தியவர்களுக்கும், அந்த ஸ்கூட்டரை சாலையில் கண்டவர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்த குறிப்பிட்ட மாடிஃபை சேத்தக் ஸ்கூட்டர் அதனை காட்டிலும் அதிக புகையை வெளியிடுகிறது.

ஆகையால் இந்த மாடிஃபை எக்ஸாஸ்ட் குழாய் காற்று மாசுவிற்கு காரணமாக அமையும் என்பது மட்டுமின்றி, ரைடருக்கும் ஆபத்தாக அமையலாம். ஏனெனில் இந்த மாடிஃபை எக்ஸாஸ்ட் குழாய் ஆனது ரைடரின் கால்களுக்கு நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ளது. பயணத்திற்கு பிறகு தெரியாமல் கால் பட்டாலோ அல்லது விபத்தின் போது பயணிகளின் உடலின் வேறேதேனும் பாகங்கள் பட நேர்ந்தாலோ அது அவர்களுக்கு மிகுந்த தீ காயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் இத்தகைய மாடிஃபிகேஷன்கள் உண்மையில் கட்டாயமாக தடுக்கப்பட வேண்டியவை.

இப்படியொரு பஜாஜ் ஸ்கூட்டரை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?

நமது இந்தியாவில் பைக், கார் மாடிஃபிகேஷன்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த மாடிஃபை சேத்தக் ஸ்கூட்டருக்கும் பலத்த கண்டனங்கள் இணையத்தில் எழுந்திருக்கும் போல. ஏனெனில் இந்த குறிப்பிட்ட மாடிஃபை ஸ்கூட்டருக்கு மீண்டும் அதன் வழக்கமான ஹேண்டில்பாரை வழங்கியுள்ளனர். ஆனால் முன்பக்க கார் அலாய் சக்கரமும், எக்ஸாஸ்ட் குழாயும் அப்படியே தான் உள்ளது. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து இவற்றையும் விரைவில் அவர் மாற்றியமைப்பார் என நம்புவோம்.

ஏனெனில் இந்த சேத்தக் ஸ்கூட்டரில் வெவ்வேறான பாகங்களை பொருத்தி, பின்னர் கழற்றுவதை இந்த பஞ்சாப் இளைஞர் தொடர் வேலையாகவே கொண்டுள்ளார். இவரது மேற்கூறப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதே பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை ராயல் என்பீல்டு பைக்குகளின் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் டிராக்டர்களின் எக்ஸாஸ்ட் குழாய் உடன் காண முடிகிறது. சேத்தக்கை பொறுத்தவரையில், இது 1980-90ஆம் காலக்கட்டங்களில் பஜாஜ் ஆட்டோவின் நம்பிக்கைக்குரிய ஸ்கூட்டராக விளங்கியது. இதன் காரணமாகவே அதே பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Old bajaj chetak scooter fitted with car steering wheel and alloy wheel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X