உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

நிதின் கட்காரி நாடே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இந்தியாவில் வாகனங்களை வாங்குவது எந்த அளவிற்கு சுலபமோ, அதே அளவிற்கு அதனை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதும் சுலபம்தான். ஆனால், மேலை நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற பல செயல்முறைகளை வெற்றிகரமாக செய்து முடித்த பின்னரே வாகனத்தை இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படுகின்றது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

அதேசமயம், இதற்காக அவர்கள் பல வழிகளில் மெனக்கெட வேண்டிய சூழல் நிலவுகின்றது.

ஆனால், இந்தியாவில் அவ்வாறு அல்லாமல், சுலபமான வழிமுறைகளை கடந்தாலே போதுமானதாக இருக்கின்றது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இதையும் பெரும்பாலோனோர் செய்து முடிக்காமல், ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு, ஒரு சிலர், ஓட்டுநர் உரிமத்திற்காக வைக்கப்படும் தேர்வில் வெற்றிகூட பெறாமல், ஏன்... ஆர்டிஓ அலுவலகம் பக்கம்கூட செல்லாமல், லஞ்சத்தை வழங்கி ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் மூன்றில் ஒருவர் போலியான ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். நிதின் கட்காரியின் இந்த தகவல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த தகவலை, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெற்ற, புதிய மோட்டார் வாகனங்கள் திருத்த சட்ட மசோதா முன்மொழிவின்போது அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கின்றது. இருப்பினும், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் போலி வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு, ஓட்டுநர் உரிமங்களில் வழங்கப்படும் புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், தளர்வான விதிகளும் இதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது" என்றார்.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

மேலும் பேசிய அவர், "இந்தியாவில் உள்ள பல சாலைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர், இந்த அபாயமான சாலைகளால் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறக்கின்றனர். இதன்காரணமாக, பல ஆண்டு முயற்சியை அடுத்து, இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

புதிய விதிகளின்படி, முன்னதாக விதிக்கப்பட்டுவந்த அபராதத் தொகை, தற்போது பத்து மடங்கு உயர்ந்துள்ளது. ஆகையால், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குபவர்களுக்கு முன்பு விதிக்கப்பட்டு வந்த ரூ. 500 அபராதம் 5000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என அனைத்து விதமான விதிமீறலுக்கும் அபராதத் தொகை பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

அவ்வாறு, ஹெல்மெட் அணியமால் இருசக்கர வாகனத்தை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் இருத்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவ் செய்தல் உள்ளிட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இந்த அதிக அபராதத் தொகையை காரணம் காட்டி, வாகன ஓட்டிகள் இனி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

தற்போது, இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து ஆர்டிஓ-க்களும் சுலபமான வழிமுறையைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் வழங்கி வரும் நிலையில், நாட்டின் தலைநகரான புது டெல்லியில் செயற்கை நுண்ணறிவு கொண்ட தானியங்கி ஓட்டுநர் வழங்கும் மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

இது, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும், தானியங்கி முறைமூலம் பரிசோதித்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குகின்றது. இதில், விண்ணப்பதாரர்களை நோட்டமிடும் வகையில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமரா மற்றும் பயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விண்ணப்பதாரர்களின் சிறு சிறு அசைவும் கண்கானிக்கப்பட்டு ரிசல்ட் வழங்கப்படுகின்றது.

உண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...!

அவ்வாறு, இந்த தானியங்கி ஓட்டுநர் பயிற்சி மையத்தில், ஓட்டுநர் உரிமத்திற்காக தேர்வை மேற்கொண்ட விண்ணப்பதாரர்கள், 50 சதவீதம் தோல்வியடைந்ததாக அண்மையில் தகவல் வெளியாகியது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். இந்த நவீன தரம் கொண்ட புதிய பயிற்சி மேடையை மாருதி சுஸுகி நிறுவனம், பராமரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Source: timesofindia

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
One Out Of Three Driving Licenses In India Are Fake- Nitin Gadkari. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X