செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கே இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக இந்தியா தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள், டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டொனால்டு ட்ரம்ப்பின் வருகையை முன்னிட்டு, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்தியாவில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் குழுவினருடன் டொனால்டு ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆக்ரா வரும் அவரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்க உள்ளனர். டொனால்டு ட்ரம்ப் வருகையால் ஆக்ராவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ஆனால் தாஜ்மஹாலை பார்வையிடுவதில், டொனால்டு ட்ரம்புக்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் சென்றுதான் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினரை தாஜ்மஹாலுக்கு ஏற்றி செல்லும் பணிகளில், 15க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இதற்கு காரணம் உள்ளது. அதாவது தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் பரப்பளவிற்குள் எரிபொருளில் இயங்க கூடிய எந்தவொரு வாகனமும் நுழைய கூடாது. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது. எனவே டொனால்டு ட்ரம்ப்பால் தனது வழக்கமான வாகன பரிவாரங்களுடன் தாஜ்மஹாலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இதனால்தான் அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்திய அதிகாரிகள் எலெக்ட்ரிக் வாகனங்களில் அழைத்து செல்ல உள்ளனர். இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில், பேட்டரியால் இயங்க கூடிய கோல்ப் வண்டிகள் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் ஆகியவை அடங்குகின்றன. இதில், சில வண்டிகள் வெகு சமீபத்தில்தான் உள்ளூர் நிர்வாகத்தால் வாங்கப்பட்டுள்ளன.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அவை கடந்த ஜனவரி மாதம் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜ்மஹாலின் கிழக்கு கேட்டில் இருந்து சுமார் 650 மீட்டர்கள் தொலைவில் உள்ள ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் இருந்து டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் எலெக்ட்ரிக் வாகனங்களில் புறப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

டொனால்ட் ட்ரம்ப்பை தாஜ்மஹாலுக்கு அழைத்து செல்வதற்கு, அவரது புல்லட் புரூஃப் பீஸ்ட் வாகனத்திற்கு தடை விதிக்கப்படும் நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஓபமா, கடைசி நிமிடத்தில் தனது ட்ரிப்பை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் திணறி வருகின்றன. தலைநகர் டெல்லியே மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம்தான். காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் கக்கும் புகையே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவது எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதன் விளைவாக தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Over 15 Electric Vehicles To Ferry US President Donald Trump To Taj Mahal. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X