Just In
- 9 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 10 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 22 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies
கிளைமேக்ஸ் சுத்தமா புடிக்கல.. நல்லா டைம் எடுத்து எழுதுங்க.. கடுப்பில் கிளம்பினாரா டாப் நடிகர்?
- News
கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
- Finance
டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனா-வின் புதிய கட்டுப்பாடு..!! - வீடியோ
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
போலீஸ் திடீர் அதிரடி... ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... ஏன் தெரியுமா?
ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு தற்போது மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையை பின்பற்ற தவறுபவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னையை தொடர்ந்து மும்பை போக்குவரத்து போலீசாரும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வரிசையில், உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில், சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அதிரடியாக அபராத சலான்கள் வழங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

முதல் அமைச்சரின் இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், கடந்த மே 19ம் தேதியில் இருந்து மே 27ம் தேதி வரை, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராத சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கவுதம் புத்தா நகர் காவல் துறையினர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ''மே 19ம் தேதியில் இருந்து மே 27ம் தேதி வரை, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5,070 வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தது, இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணம் செய்தது போன்ற விதிமுறை மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியது, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியது, தவறான லேனில் காரை ஓட்டியது, நோ-பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்தது, சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலை மீறி சென்றது போன்ற விதிமுறை மீறல்களுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கால கட்டத்தில் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலைகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக தற்போது காவல் துறையினர் அதிரடி காட்டி வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதை தடுக்கவே தற்போது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். அப்போதுதான் விபத்துக்களை குறைக்க முடியும்.
Note: Images used are for representational purpose only.
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?