குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் 2019ம் ஆண்டுக்கான சாலை விபத்துக்கள் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு இந்தியாவில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்களுக்கு அதிவேகமே முதன்மையான காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு 4,49,002 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 1,51,113 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 4,51,361 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் 1,230 சாலை விபத்துக்கள் மற்றும் 414 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அல்லது ஒவ்வொரு மணி நேரமும் 51 சாலை விபத்துக்கள் மற்றும் 17 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிகப்படியான சாலை விபத்துக்கள் மற்றும் மரணங்களுக்கு அதிக வேகம்தான் முதன்மையான காரணமாக இருந்துள்ளது. அதிக வேகம் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களில், 1,01,699 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. சாலை விபத்துக்களால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் இது 67.3 சதவீதம் ஆகும்.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

மொத்த சாலை விபத்துக்களில், அதிக வேகம் காரணமாக நிகழ்ந்த சாலை விபத்துக்களின் சதவீதம் 71 ஆகும். காயம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில், அதிக வேகம் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களில் காயம் அடைந்தவர்களின் சதவீதம் 72.4 ஆகும். இந்த புள்ளி விபரங்களை பார்த்த பிறகாவது, அதிவேக பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

அதே சமயம் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 22,656 பாதசாரிகள் உயிரிழந்திருந்தனர். ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25,858 ஆக உயர்ந்துள்ளது. சாலை விபத்துக்களில் பாதசாரிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 14.13 சதவீதம் உயர்ந்துள்ளது.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும், பாதசாரிகளும்தான் சாலை விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சாலை விபத்துக்களால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 54 சதவீதம் பேர் இந்த பிரிவினர்தான் (இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும், பாதசாரிகளும்). அதிகமாக காயமடைவதும் இதே பிரிவினர்தான்.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

பாலின அடிப்படையில் பார்த்தால், 2019ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1,29,319 ஆண்களும் (86 சதவீதம்), 21,794 பெண்களும் (14 சதவீதம்) உயிரிழந்துள்ளனர். உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் முதன்மையானதாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...

ஆனால் அதனை மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக இந்தியாவில் தற்போது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Over-Speeding Caused Most Road Accident Deaths In India In 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X