இது தெரிஞ்சா பலர் விமானத்திலேயே ஏற மாட்டாங்க! ஆக்ஸிஜன் மாஸ்க் பின்னால் உள்ள யாருக்கும் தெரியாத ரகசியம்!

விமானத்தின் பயணிப்பவர்களுக்குப் பயணம் துவங்கும் முன்பு ஆக்ஸிஜன் மாஸ்கை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லித்தரப்படுகிறது. இப்படியாக ஆக்ஸிஜன் மாஸ்க் பின்னால் உள்ள பல விஷயங்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாது. இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமான பயணம் பலருக்கு பெரும் விருப்பமான ஒரு விஷயமாக இருக்கும். பலருக்கு விமானம் என்பது இன்றும் பெரும் கனவாக இருக்கும். பலர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாகப் பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படியாக விமானம் பலருக்குப் பல விதமான உணர்வுகளையும் உற்சாகத்தையும் தருகிறது எந்த அளவிற்கு உற்சாகத்தைத் தருகிறதோ அதே அளவிற்கு விமானங்கள் ஆபத்து நிறைந்தது.

ஒரு விமானமாம் பூமிக்கும் ஆகாயத்திற்குள் நடுவில் எந்த பிடிமானமும் இல்லாமல் காற்றில் பறக்கிறது. அதற்குள் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விமானங்கள் தனது கட்டுப்பாட்டை இழக்கலாம். அல்லது வெடித்துக் கூட சிதறலாம். அதனால் தான் விமான நிலையங்களில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், பாதுகாப்பு சோதனை எல்லாம் செய்யப்படுகிறது. எந்த வகையிலும் விமானங்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விமானம் கிளம்பும் முன் மட்டுமல்ல விமானம் ஆகாயத்தில் பறக்கும் போதும் விமானத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் விமானத்தில் பயணிப்பவர்களின் உயிரைக் காப்பாற்ற ஏகப்பட்ட பாதுகாப்பும் அம்சங்கள் தற்போது பின்பற்றப்படுகிறது. இதில் முக்கியமான ஆக்ஸிஜன் மாஸ்க் விமானத்தின் ஒவ்வொரு சீட்டிற்கு மேல் பகுதியிலும் ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்கும் இது அவசரக் காலத்தில் மட்டுமே கீழே வரும் மற்ற நேரங்களில் வெளியில் வராது.

இந்த ஆக்ஸிஜன் மாஸ்கின் கண்ட்ரோல் பைலட்டிடமும், தானியங்கியாகவும் மட்டுமே இருக்கும். பைலட் எப்பொழுது தேவை என நினைக்கிறாரோ அப்பொழுது இந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அவர் திறந்து பயணிகள் சுவாசிக்கக் கொடுத்துவிடலாம். அல்லது தானியங்கியைச் செயல்பட வேண்டும் என்றால் 2 விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று கேபின் பிரஷர் குறைய வேண்டும்.

அதாவது விமானம் கிளம்பும் போது கேபின் பிரஷரைஸ் செய்யப்படும். இதனால் விமானம் எவ்வளவு உயரத்தில் பிறந்தாலும் அதனால் பயணிகளுக்குக் காது வலி, மூக்கிலிருந்து ரத்தம் வருதல் உள்ளிட்ட பிரச்சனை வராது. இந்த கேபின் பிரஷர் லாஸ் ஆகிவிட்டால் விமானத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். இதனால் கேபின் பிரஷர் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்துவிட்டால் விமானியின் கட்டளை இல்லாவிட்டாலும் இந்த ஆக்ஸிஜன் மாஸ்க் ஒப்பன் ஆகிவிடும்.

அடுத்ததாக விமானத்தின் உயரம் மிகக் குறுகிய நேரத்தில் வேகமாகக் குறைந்தாலும் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கருதி இந்த ஆக்ஸிஜன் மாஸ்க் திறந்து விடும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் தான் தானியங்கியாக ஆக்ஸிஜன் மாஸ்க் திறக்கும். இந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என விமானம் கிளம்பும் முன்பே விமானப் பணிப் பெண்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லிக்கொடுக்காத ஒரு விஷயம் இருக்கிறது. இந்த விமானத்தில் மாஸ்க் வழியாக ஆக்ஸிஜன் வழங்குவதற்காக விமானத்தில் ஆக்ஸிஜன் டேங்க் பொருத்தப்பட்டிருக்கும். இதில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு வெறும் 15 நிமிடம் வரைதான் நீடிக்கும். 15 நிமிடத்திற்கு மேல் ஆக்ஸிஜன் இருக்காது. என்னது இவ்வளவு குறைவான ஆக்ஸிஜன் தான் இருக்குமா? எனத் தோன்றுகிறது அல்லவா?

ஆனால் இது போதுமான அளவு தான் என ஆய்வுகள் சொல்லுகிறது. அதாவது விமானம் உயரம் குறைகிறது என்றால் விமானம் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடிக்கு மேல் இருந்தால் தான் இந்த ஆக்ஸிஜன் தேவை 10 ஆயிரம் அடிக்குக் கீழ் ஆக்ஸிஜன் தேவையில்லை. அதனால் விமானம் அதிகபட்ச உயரத்தில் பறந்தாலும் 15 நிமிடங்களுக்குள் 10 ஆயிரம் அடிக்குக் கீழ் வந்துவிடும். கேபின் பிரஷர் குறைந்தாலும் அதைச் சீர் செய்ய 15 நிமிடங்கள் அதிகம் தான் அதனால் 15 நிமிட ஆக்ஸிஜனே போதுமானது.

அதிகமாக ஆக்ஸிஜனை வைத்திருந்தால் என்ன என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அப்படியான ஆக்ஸிஜனை ஸ்டாக் வைத்தால் விமானத்தின் எடை அதிகமாகும். இதனால் எரிபொருள் செலவு கூடும் இது நேரடியாக விமானத்தின் டிக்கெட் விலையில் பிரதிபலிக்கும். இதனால் தான் விமானத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே செயல்படும் அளவிலான ஆக்ஸின் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Oxygen mask in flight last only in 15 min know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X