இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

பசுமையான சுற்றுச்சூழலை கொண்டுவரும் முயற்சியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிகள் குறைப்பட்டு வருவதாக பாகிஸ்தானின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

நம் இந்திய அரசாங்கத்தை போல் பாகிஸ்தான் அரசாங்கமும் இவி-களுக்கான வரிகளை குறைத்து வருகிறது. இந்த வரி குறைப்பு இப்போது அல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்பே அந்த நாட்டில் கொண்டுவர துவங்கப்பட்டுவிட்டது.

2019இல் பாகிஸ்தான் அரசு கொண்டுவந்த பசுமை கொள்கையின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் பயன்படுத்தப்படும் மொத்த கார்கள் & ட்ரக்குகளில் கிட்டத்தட்ட 30% எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதத்தை 2040க்குள் 90% ஆக அதிகரிக்கவும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

இந்த பசுமை கொள்கையின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை முழுமையாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரித்தும், பாகங்களாகவும் இறக்குமதி செய்யவும், எலக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டில் தயாரிக்கவும் அதிகப்படியான வரி விலக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வரி விலக்குகளினால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை இந்த நாட்டில் குறைந்துள்ளதை தொழில் நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள் வெளிக்காட்டுகின்றன.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

கார்பன் உமிழ்வு கட்டுப்பாட்டுகள் மற்றும் நகர்புற மாசுபாட்டை குறைக்க தற்போதைக்கு அவசியமான நாடுகளுள் நம் இந்தியாவை போல் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது. ஏனெனில் நமது தேசிய தலைநகர் டெல்லியை காட்டிலும், உலகின் மிகவும் மாசு மிகுந்த நகரமாக பாகிஸ்தானின் லாகூர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டிற்கு, புதைபடிவ எரிபொருளால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும், பருவகால பயிர்களை எரிப்பதால் ஏற்படும் புகையும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இவை இரண்டும் இணைந்து இந்த ஆண்டில் காற்று மாசுபடுத்துதலில் குறிப்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக விளங்கி வருகின்றன.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

பாகிஸ்தானில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு விற்பனை வரி 0-வில் இருந்து 17% வரையில் குறைத்து கொள்ளப்பட்டுள்ளன. 17% வரி குறைப்பை பெற வேண்டுமென்றால், அந்த எலக்ட்ரிக் காரில் 50 kWh-க்கும் குறைவான ஆற்றல் கொண்ட பேட்டரி தொகுப்பை பொருத்த வேண்டும் என அரசாங்கத்தின் பொறியியல் மேம்பாட்டு துறையின் நிர்வாக இயக்குனர் அசிம் அயாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேட்டரி, கண்ட்ரோலர்கள் மற்றும் இன்வெர்டர்கள் போன்ற எலக்ட்ரிக் கார் பாகங்களுக்கான சுங்க வரியும் 1% ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. முழுவதுமாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி பாகிஸ்தானில் கடந்த 1 வருடத்தில் 10%-இல் 25% வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

புதிய வரி குறைப்புகள் மூலமாக, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சிறிய அளவிலான எலக்ட்ரிக் காரிலும் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக 2,900 டாலர்களை வரையில் சேமிக்கலாம் என பாகிஸ்தான் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளரான ஷௌகத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக 2025ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் 5 லட்ச எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும், 1 லட்ச எலக்ட்ரிக் கார்கள், வேன்கள் மற்றும் சிறிய ரக லாரிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பாகிஸ்தான் அரசு திட்டங்களை வகுத்து பணியாற்றி வருகிறது. இதுகுறித்து பிரதமரின் சிறப்பு உதவியாளரான மாலிக் அமின் அஸ்லாம் கூறுகையில், நிச்சயமாக வரி விலக்குகள் விலை புள்ளியை போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது.

இவி-களை அதிகரிக்க வரி குறைப்பில் தீவிரமாக இறங்கும் பாகிஸ்தான்!! 2025க்குள் 1 லட்ச மின்சார கார்களுக்கு திட்டம்!

மற்றும் மக்கள் மின்சார வாகனங்களில் செல்வதை மிகவும் கவர்ச்சிக்கரமானதாக ஆக்குகிறது என்றார். இருப்பினும் நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பது நம் நாட்டை போல் பாகிஸ்தானிலும் சவாலானதாக விளங்குகிறது. இருப்பினும் பாகிஸ்தானிலும் சார்ஜிங் நிலையங்களை முக்கியமான நகரங்களில் உருவாக்குவதை ஏற்கனவே சில நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டன.

நாட்டின் முக்கியமான நகரங்களில் அலுவலங்கள், வீடுகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனங்களை அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருவதாக பாகிஸ்தானின் சூழ்நிலை மாற்றம் மற்றும் மேம்பாடுகள் குறித்த நிபுணரான அலி தௌக்கீர் ஷேக் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Pakistan shifts to EV top gear with tax breaks.
Story first published: Monday, November 22, 2021, 23:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X