சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

அரசு பஸ்ஸில் ஏசி இயங்காததால், பயணி ஒருவர் அதிரடியான காரியம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், அரசு பஸ்கள் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கின்றன. பல்வேறு மாநில அரசுகள் இயக்கும் பஸ்கள் ஓட்டை, உடைசல்களாக இருப்பதால், அதில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக தனியார் பேருந்துகளுக்குதான் பயணிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் பயணிகள் மத்தியில் அரசு பஸ்கள் என்றாலே அதிருப்திதான் நிலவுகிறது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சதீஷ் ரட்டன்லால் டயாமா என்ற பயணி நீதிமன்றம் வாயிலாக தக்க பாடம் புகட்டியுள்ளார். கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

சதீஷ் ரட்டன்லால் டயாமா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 12ம் தேதி மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஷிவ்ஷாகி எனும் பேருந்தில் அவுரங்காபாத் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் ரட்டன்லால் டயாமாவின் செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே செல்போன் சார்ஜிங் பாயிண்ட் எங்கே உள்ளது? என கண்டக்டரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அந்த பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வேலை செய்யவில்லை. செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மட்டுமல்லாது அந்த பஸ்ஸில் ஏசியும் இயங்கவில்லை. இதனால் சதீஷ் ரட்டன்லால் டயாமா அதிருப்தியடைந்தார்.

MOST READ: ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே புகார் புத்தகத்தை வழங்கும்படி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதையும் வழங்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சதீஷ் ரட்டன்லால் டயாமா உடனடியாக வழக்கு தொடர்ந்தார்.

MOST READ: நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இதில், பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சதீஷ் ரட்டன்லால் டயாமா கூறியிருந்தார். இந்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

MOST READ: பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இதன்பின்பு புகார்தாரர் சதீஷ் ரட்டன்லால் டயாமாவிற்கு சம்பந்தப்பட்ட பஸ் டெப்போ 5,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Note: Images used are for representational purpose only.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசு பஸ்கள் மோசமான நிலையில்தான் உள்ளன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. ஆனால் தமிழக அரசு பஸ்கள் கூடிய விரைவில் வேற லெவலுக்கு மாறவுள்ளன. போக்குவரத்து துறையை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான பேருந்துகளை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 10 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்துகள் மற்றும் 2 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்யவுள்ளதாக பட்ஜெட்டிலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இதன்படி முதற்கட்டமாக 1,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,213 பிஎஸ்-6 பேருந்துகள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், தமிழக அரசு மற்றும் ஜெர்மனியை அடிப்படையாக கொண்டு இயங்கும் KfW வங்கிகளுக்கு இடையே, இதற்கான திட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தானது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இந்த ஒப்பந்தப்படி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையிலான 2,213 பேருந்துகள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழக பேருந்து பயணிகள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

முதன்மை செயலாளர் சந்திர மோகன் தலைமையில், போக்குவரத்து துறையின் போர்டு மீட்டிங் சமீபத்தில் நடந்தது. அப்போது 2,213 பிஎஸ்-6 பஸ்கள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதன்மை செயலாளர் சந்திர மோகன் கூறினார். இந்தியா முழுவதும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானவையாக உள்ளன. ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இதனிடையே இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், போக்குவரத்து துறைக்காக சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை என்ன?, போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், அவற்றின் செலவினங்களை கட்டுப்படுத்துவது மற்றும் பழைய பஸ்களை வெளியேற்றுவது ஆகியவை முக்கியமானவை.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில், 1,442 கோடி ரூபாய் மதிப்பில் 4,802 பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின்போது முதன்மை செயலாளர் சந்திர மோகன் கூறினார். மேலும் பயணிகள் விரும்பக்கூடிய மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் உள்ள பஸ்களை முறையாக பராமரித்து வருவாயை பெருக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் முன்பு ஓட்டை, உடைசலான பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏராளமான பஸ்களை தமிழக அரசு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இந்த சூழலில் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களையும் அதிகளவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவது பயணிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Passenger Gets Rs.5,000 Compensation For No Mobile Charging And AC In Maharashtra Government Bus. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more