சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

அரசு பஸ்ஸில் ஏசி இயங்காததால், பயணி ஒருவர் அதிரடியான காரியம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், அரசு பஸ்கள் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கின்றன. பல்வேறு மாநில அரசுகள் இயக்கும் பஸ்கள் ஓட்டை, உடைசல்களாக இருப்பதால், அதில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக தனியார் பேருந்துகளுக்குதான் பயணிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் பயணிகள் மத்தியில் அரசு பஸ்கள் என்றாலே அதிருப்திதான் நிலவுகிறது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சதீஷ் ரட்டன்லால் டயாமா என்ற பயணி நீதிமன்றம் வாயிலாக தக்க பாடம் புகட்டியுள்ளார். கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

சதீஷ் ரட்டன்லால் டயாமா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 12ம் தேதி மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஷிவ்ஷாகி எனும் பேருந்தில் அவுரங்காபாத் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் ரட்டன்லால் டயாமாவின் செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே செல்போன் சார்ஜிங் பாயிண்ட் எங்கே உள்ளது? என கண்டக்டரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அந்த பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வேலை செய்யவில்லை. செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மட்டுமல்லாது அந்த பஸ்ஸில் ஏசியும் இயங்கவில்லை. இதனால் சதீஷ் ரட்டன்லால் டயாமா அதிருப்தியடைந்தார்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே புகார் புத்தகத்தை வழங்கும்படி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதையும் வழங்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சதீஷ் ரட்டன்லால் டயாமா உடனடியாக வழக்கு தொடர்ந்தார்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இதில், பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சதீஷ் ரட்டன்லால் டயாமா கூறியிருந்தார். இந்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?

இதன்பின்பு புகார்தாரர் சதீஷ் ரட்டன்லால் டயாமாவிற்கு சம்பந்தப்பட்ட பஸ் டெப்போ 5,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Passenger Gets Rs.5,000 Compensation For No Mobile Charging And AC In Maharashtra Government Bus. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X