வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

போக்குவரத்து விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கியுள்ளார். அவருக்கு ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அபராத தொகைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகியவைதான் அந்த 5 மாநிலங்கள். அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், இது ஊழலை அதிகரிக்க செய்து விடும் என மேற்கண்ட 5 மாநிலங்களும் கூறி வருகின்றன. அதாவது வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையாட கூடும் என்பது இந்த 5 மாநிலங்களின் கருத்தாக உள்ளது.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

ஆனால் இந்தியாவின் எஞ்சிய மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து விட்டது. இதன் காரணமாக போக்குவரத்து விதிமுறை மீறல்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அபராத தொகைகள் மிக கடுமையானது என்பதே இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் சாகியா டிஎஸ்பிதான் அந்த காவல் துறை உயர் அதிகாரி. டிராபிக் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது ஸ்டாப் லைனை கடந்து செல்ல கூடாது. சட்டப்படி இது தவறு.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

ஆனால் சாகியா டிஎஸ்பியின் அதிகாரப்பூர்வ கார் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தபோது, ஸ்டாப் லைனை கடந்து சென்றது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த சமயத்தில் காருக்குள் இருந்த 2 போலீஸ்காரர்களும் சீட் பெல்ட் வேறு அணியவில்லை. பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பிறகுதான் அவர்கள் அவசர அவசரமாக சீட் பெல்ட் அணிய முயன்றனர்.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

சீட் பெல்ட் அணியாததும் கூட விதிமுறை மீறல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அருகில் இருந்து மற்றொரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம், அபராதங்கள் குறித்து அந்த பத்திரிக்கையாளர் கேட்டார். இதற்கு அந்த போலீஸ் அதிகாரி, ஸ்டாப் லைனை கடந்து சென்றால், 500 ரூபாய் அபராதம் என தெரிவித்தார்.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

இதன்பின் சீட் பெல்ட் அணியாததற்கு அபராதம் எவ்வளவு? என அந்த பத்திரிக்கையாளர் கேட்டார். இதற்கு அந்த போலீஸ் அதிகாரி, 1,000 ரூபாய் என பதில் அளித்தார். ஆக மொத்தம் 3,000 ரூபாய் அபராதம். 500 + 1,000 என மொத்தம் 1,500 ரூபாய்தானே அபராதம் வருகிறது என நீங்கள் நினைப்பது நன்றாக புரிகிறது.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

அரசு அதிகாரிகளோ அல்லது விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறை அதிகாரிகள் போன்றவர்களோ விதிமுறைகளை பின்பற்ற தவறினால், அதற்கான அபராத தொகையை இரு மடங்காக செலுத்த வேண்டும் என திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது சாதாரண வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை காட்டிலும் அவர்களுக்கு இரு மடங்கு அதிக அபராதம்.

விதிமுறையை மீறிய டிஎஸ்பி சிக்கினார்... சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

எனவேதான் 3,000 ரூபாய் அபராதம். இதன்பின் அந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி, சலானை வினியோகித்து அபராத தொகையையும் வசூலித்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம். 1:08வது நிமிடத்தில் இருந்து இந்த வீடியோவை பாருங்கள்.

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறை அதிகாரிகளே போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Source: ABP News/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Patna Senior Cops Busted For Not Following New Motor Vehicle Act. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X