பெட்ரோல் - டீசல் விற்பனை டல்... இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?

இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாதம் 1-15 தேதிகளில் பெட்ரோல் டீசல் விற்பனை குறைந்துள்ளது. இது குறித்த தெளிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

உலகம் முழுவதும் போக்குவரத்திற்கு மூலமாக இருப்பது பெட்ரோல் டீசல் தான். இந்தியா உலகளவில் அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல்களை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இன்று வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. இதனால் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சுலபமாகப் பயணித்து வருகின்றனர். இதற்கு பெட்ரோல் டீசல் தான் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

குறிப்பாக இந்தியாவில் பெட்ரோலை விட டீசல் பயன்பாடு தான் அதிகமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கண்டால் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களின் விலையும் மிகப்பெரிய அளவில் ஏற்றம் பெறும். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் டீசலின் அளவு கண்காணிக்கப்படுகிறது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

இந்தியாவைப் பொருத்தவரை பெட்ரோல், டீசல்களுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து தான் பெரும் பகுதி இறுக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த பயன்பாட்டிற்காக நாம் வெளிநாடுகளையே நம்பி இருக்கிறோம். இதைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இதற்கு ஒரு பங்காக பெட்ரோல் டீசலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

இந்நிலையில் இந்த மாத பெட்ரோல் டீசல் விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதமாக இந்தியாவில் பெட்ரோல், டீசலின் பயன்படு குறைவாக இருந்து வருகிறது. குறிப்பாக டீசல் பயன்பாடு வெகுவாக குறைத்துள்ளது. இதற்கு முக்கியமாக இந்தியா முழுவதும் பெய்த மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தான் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

இந்தியாவின் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பெட்ரோல், டீசல் விற்பனையில் எதிரொலித்துள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் 1-15ம் தேதி வரையில் மொத்தம் 2.82 மில்லியன் டன் பெட்ரோல் டீசல் விற்பனையாகியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

இதுவே கடந்த மாத விற்பனையை ஒப்பிடும் போது கடந்த மாதம் இதே காலகட்டத்தில் மொத்தம் 3.17 மில்லியன் டன் பெட்ரோல் டீசல் விற்பனையாகியிருந்தது. அதாவது 11.2 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது. இது மாதாந்திர கணக்கு ஒப்பீடு மட்டுமே வருடாந்திர கணக்கு ஒப்பீட்டைப் பார்த்தால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான பெட்ரோல் டீசலை விட இந்தாண்டு மிகப்பெரிய அளவில் பெட்ரோல் டீசல் விற்பனையாகியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

2021ம் ஆண்டு கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு 2021 ஆகஸ்ட் மாதம் என்பது மெல்ல மெல்ல இந்தியா இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த காலம் அதனால் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைவாக இருந்தது. இருந்தாலும் அதன் விற்பனையை ஒப்பிட்டுப் பார்த்தால் 32.8 சதவீதம் இந்தாண்டு விற்பனை அதிகமாகியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே 1-15 தேதியில் 1.78 மில்லியன் டன் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அப்பொழுதும் கொரோனா முதல் அலை காலம் என்பதால் விற்பனை மந்தமாவே இருந்தது அதை ஒப்பிட்டுப் பார்த்தால் 58.2 சதவீதம் இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதுவே கொரோனாக்கு முன்பான 2019ம் ஆண்டு விற்பனையை ஒப்பிட்டுப் பார்த்தால் 23 சதவீதம் அதிகமாகியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விற்பனை டல் . . . இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா

ஆகஸ்ட் மாத விற்பனையை பெட்ரோல், டீசல் எனப் பிரித்துப் பார்க்கும் போது பெட்ரோல் விற்பனை கடந்த மாதத்தை விட இந்த ஆகஸ்ட் மாதம் 0.8 சதவீதம் அதிகமாகி 1.29 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்தாமாதம் 1.28 மில்லியன் டன் பெட்ரோல் விற்பனையாகியிருந்தது. இதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிட்டால் 30.6 சதவீதம் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. 2020 ஆகஸ்ட்டை விட 43.4 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதுவே 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத முதல் பாதி விற்பனையுடன் ஒப்பிட்டால் 36 சதவீதம் அதிகமாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Petrol diesel demand falls in august
Story first published: Tuesday, August 16, 2022, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X