மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மத்திய அரசின் அதிரடி நடடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மீது மத்திய அரசு விதித்து வரும் கலால் வரி (Excise Duty) அதிரடியாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் (Union Finance Minister) நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அதிரடியாக அறிவித்துள்ளார். வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வந்த பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக குறைகிறது. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலையானது ஒரு லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: பெட்ரோல் மீது விதிக்கப்பட்டு வரும் கலால் வரியை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் குறைக்கப்படுகிறது. டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் கலால் வரி ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

பெட்ரோல், டீசல் விலை இந்த அளவிற்கு குறையவுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒருவேளை மாநில அரசுகள் வாட் வரியை குறைக்கும் பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் மாநில அரசுகள் இந்த கோரிக்கையை ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தால், வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

வருவாயை இழக்க நேரிடும் என்ற காரணத்தால்தான், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. எனவே மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒருவேளை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேண்டுமானால், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ பெட்ரோல், டீசல் விலை இந்த அளவிற்கு குறையவுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்த காரணத்தால், தினசரி வாகனங்களை பயன்படுத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. சரக்கு போக்குவரத்திற்கு டீசல்தான் ஆதாரமாக இருப்பதால் இந்த விலை உயர்வு பிரச்னையை மக்கள் சந்திக்க நேரிட்டது.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால், அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது பலரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக வலை தளங்களில் காண முடிகிறது.

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை... பெட்ரோல், டீசல் விலை குறைகிறது... எவ்ளோனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயை கடந்து விற்பனையாகி கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. ஆனால் மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள காரணத்தால், பெட்ரோல், டீசல் விலை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு குறையவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Petrol diesel prices to drop sharply here is the reason why
Story first published: Saturday, May 21, 2022, 21:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X