மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

பெட்ரோல் விலை விரைவில் சதம் அடித்து விடும் என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு பெட்ரோல் விலை, 99.99 ரூபாயை கடக்க வாய்ப்பே இல்லை.

பெட்ரோல் விலை விரைவில் சதம் அடித்து விடும் என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு பெட்ரோல் விலை, 99.99 ரூபாயை கடக்க வாய்ப்பே இல்லை என்பது வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் செய்தி. அது ஏன்? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (செப்.17), ஒரு லிட்டர் பெட்ரோல் 85.15 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 77.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, நடுத்தர வர்க்க மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 85.15 ரூபாய் என்றாலும், மும்பை உள்பட இந்தியாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தொட்டிருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை இம்முறை கண்டிப்பாக 100 ரூபாயை எட்டிவிடும் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

ஆனால் நிச்சயமாக பெட்ரோல் விலை தற்போதைக்கு 99.99 ரூபாயை கடக்காது என்பது வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் செய்தி. உண்மைதான். அது ஏன்? என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யும் இயந்திரங்களில் இன்டிகேட்டர் ஒன்று இருக்கும். அன்றைய தினத்தில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? என்பதை இந்த இன்டிகேட்டர்கள் காட்டும். உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புகையில் நீங்கள் இதை கவனித்திருக்கலாம்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது, தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? என்பது, இயந்திரங்களில் நாள்தோறும் மாற்றியமைக்கப்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி அந்த இன்டிகேட்டரில் 99.99 ரூபாய்க்கு மேல் மாற்றியமைக்க முடியாது.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

அதாவது 99.99 ரூபாய் வரையிலான விலை ஏற்றத்தை மட்டுமே, பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யும் இயந்திரங்களில் 'செட்' செய்ய முடியும். ஒரு வேளை பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தால், அந்த இயந்திரங்களால் விலையை காட்ட முடியாது. எனவே மேன்யூவலாக மட்டுமே பில்களை கணக்கிட முடியும்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

ஆனால் மேன்யூவலாக பில்களை கணக்கிடுவது என்பது மிகவும் சவால் நிறைந்த பணி. அத்துடன் மூன்று இலக்க விலையை காட்டும் வகையில் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றாலும், நீண்ட காலம் பிடிக்கும். எனவேதான் பெட்ரோல் விலை தற்போது சதம் அடிக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

நார்மல் பெட்ரோலின் விலை ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவில் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பிரீமியம் பெட்ரோலின் விலை ஏற்கனவே சதம் அடித்து விட்டது தெரியுமா? தற்போது அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100.3 ரூபாய்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

ஆனால் இயந்திரங்கள் எல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 0.33 என்றே காட்டுகின்றன. எனவே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் எல்லாம் பில் தொகையை மேன்யூவலாக மட்டுமே கணக்கிட்டு வருகின்றனர். அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலின் விற்பனை மிக மிக குறைவுதான்.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

ஆனால் மேன்யூவலாக கணக்கிடும் பணி, மிகவும் கடினமாக இருப்பது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறி வருகின்றனர். தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமானது, 99 ஆக்டேன் பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது. இதன் பெயர் பவர் 99.

மோடியே நினைத்தாலும் பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது.. கட்டம் அப்படி..

நார்மல் பெட்ரோலை காட்டிலும் பவர் 99 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 20 ரூபாய் அதிகம். கணக்கிடும் பணிகளில் உள்ள சிரமம் காரணமாக, பவர் 99 பெட்ரோல் விற்பனையை, சில பெட்ரோல் பங்க்குகள் நிறுத்தி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வாக கருதப்படுவது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். இந்த வகையில் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Petrol Price Cannot Go Over Rs 99.99 Per Litre-Because Machines Can't Display The Figure. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X