Just In
- 25 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- News
அல்வா.. சோன்பப்ளி.. மைசூர் பாகு.. சென்னையிலிருந்து ஸ்வீட்களை பார்சல் கட்டிச் சென்ற செஸ் வீரர்கள்!
- Sports
புயலாய் வந்து காணாமல் போன தமிழக வீரர்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.. விளையாடிய காதல்
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- Technology
பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை, லிட்டர் ரூ125க்கு விற்பனை... போராட்டத்தில் குதிக்கும் மக்கள்....
நேபாள நாட்டில் பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது லிட்டர் இந்திய மதிப்பில் ரூ125க்கு விற்பனையாகிறது. இந்த பெட்ரோல் விலை ஏற்றம் குறித்த முழுமையான விபரங்களைக் காணலாம்.

பெட்ரோல்/ டீசல் என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான விஷயம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடிவு செய்யும் திறன் இந்த பெட்ரோல்/ டீசலுக்கு தான் இருக்கிறது. உலகம் முழுவதும் போக்குவரத்துக்கள் பெரும்பாலும் இதை எரிபொருளாக வைத்தே இயங்குகிறது. பெட்ரோல் டீசல்கள் ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

பெட்ரோல்/டீசலை பொருத்தவரை கச்சா எண்ணெய்யிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருளாகும். உலகில் அமெரிக்கா, அரபு நாடுகள், ரஷ்யா போன்ற நாடுகளிடம் எண்ணெய் வளம் அதிகம் இருக்கிறது. இந்த நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதைச் சுத்திகரிப்பு செய்தி அதிலிருந்து பெட்ரோலை, டீசல் போன்ற பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தயார் செய்யப்படும் பெட்ரோல்/ டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து தான் பெட்ரோல்/டீசலை நேரடியாக இறக்குமதி செய்து அந்த நாட்டு மக்களுக்கு வழங்குகின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை பெட்ரோலுக்கான விலை குறைவாக இருந்தாலும் அதற்கான வரி மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் சில்லறை வணிகத்திற்கு வரும் பெட்ரோலின் விட இரண்டு மடங்காக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வாரம் பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர்த்திப்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தற்போது நேபாள நாட்டில் ஆளும் அரசு கடந்த வாரம் பெட்ரோல் விலையை 12 சதவீதமும், டீசல் விலையை 16 சதவீதமும் உயர்த்தியது. அந்நாட்டில் நேபால் ஆயில் கார்பரேஷன் என் அமைப்பு தான் நாடு முழுவதும் பெட்ரோல் விநியோகம் செய்கிறது.

தற்போது விலை உயர்த்தப்பட்ட பின்பு அந்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 199 நோப்பாள ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ124) டீசல் விலை லிட்டருக்கு 192 நேபாள ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ120 ) என்ற விலையில் விற்பனையாகிறது.

இதற்கு அந்நாட்டு அரசு விளக்கங்கள் அளித்த போது ரஷ்யா- உக்ரைன் போர் தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இதனால் சர்வதேச அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

நேபால் ஆயில் கார்பரேஷன் பொருத்தவரை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தான் அந்நாட்டிற்கான ஒட்டு மொத்த பெட்ரோலையும் ஏற்றுமதி செய்கிறது. இதற்காக அந்நிறுவனம் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியாவில் சுத்திகரிப்பு செய்து, பெட்ரோல்/ டீசலாக ஏற்றுமதி செய்கிறது.

இதனால் மத்திய மாநில அரசு வரிகள் எதுவும் இதற்கு வாராத மாறாகச் சுத்திகரிப்பிற்கான சிறிய தொகை மட்டும் சேர்க்கப்படும். இதனால் இதற்கு முன்னர் இந்தியாவை விட நோபாளத்தில் பல நேரங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்திருக்கிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிடமும் நேபாளம் பெட்ரோல் டீசலை வாங்கவில்லை.

இதனால் நேபாள பார்டர்களில் அங்கிருந்து குறைந்த விலையில் பெட்ரோலைவாங்கி வந்து இந்தியாவில் சட்ட விரோதமாக விற்பனை நடந்துவந்தது. போலீசாரும் இதற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தற்போது இந்தியாவை விட நேபாளத்தில் பெட்ரோல் விலை அதிகமாகவிட்டது. இனி இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பெட்ரோல்கள் கடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

தற்போது நேபாளத்தில் எதிர்கட்சியான யூனிஃபைடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராக அந்நாட்டில் உள்ள இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் பல இடங்களில் கலவரம் வெடித்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் விரைவில் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கலாம்.
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!