இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...

இந்தியாவில் பெட்ரோல் விலைக்கும் தனி நபர் வருமானத்திற்கும் முக்கியமான தொடர்பு இருப்பதாகவும், இந்தியா மட்டுமல்ல பல நாடுகளின் பெட்ரோல் விலைக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவை விடப் பல வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது குறித்தும் பாங்க் ஆஃப் பரோடா ஒரு பொருளாதார ஆய்வை செய்துள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல்களைக் கீழே காணலாம்

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்தியாவில் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது. மக்கள் எல்லோரும் கடும் விலையேற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று பெட்ரோல் விலை பெரும்பாலான மாநிலங்களில் லிட்டருக்கு ரூ110-ஐயும் தாண்டி விற்பனையாகி வருகிறது. ஆனால் மற்ற பல நாடுகளில் உள்ள விலையை ஒப்பிடும் போது இந்தியாவில் பெட்ரோல் மிக மலிவான விலையிலேயே கிடைக்கிறது எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான் உலகில் பல நாடுகளில் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

சமீபத்தில் பாங்க் ஆஃப் பரோட்டா நிறுவனம் உலக அளவில் ஒரு பொருளாதார ஆய்வை மேற்கொண்டு அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. அதில் கடந்த மே 9ம் தேதி உலகம் முழுவதும் விற்பனையான பெட்ரோல் விலையை ஒப்பிட்டு இந்த ஆய்வு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை விரிவாகக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் பெட்ரோல் விலை

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலையேற்றம் தான். கச்சா எண்ணெய்யிலிருந்து தான் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்த ஆய்வில் மொத்தம் உலகில் உள்ள 106 நாடுகளில் பெட்ரோல் விலை ஒப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாடுகளிலும் அந்நாட்டுத் தலைநகரில் பெட்ரோல் என்ன அந்நாட்டின் பணத்தில் பெட்ரோல் என்ன விலையில் விற்பனையாகிறதோ அந்த பணத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றி உலக அளவில் பெட்ரோல் விலை ஒவ்வொரு நாட்டிலும் என்ன விலை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

அந்த ஆய்வின் படி உலகம் முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அமெரிக்கப் பண மதிப்பில் அரை சென்ட் முதல் 2 டாலருக்கும் அதிகமான விலையில் பெட்ரோல் விலை விற்பனையாகிறது. சராசரியாக உலகில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.22 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.35 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்திய பெட்ரோலின் விலை உலக சராசரி பெட்ரோல் விலையைவிடச் சற்று அதிகமான விலையில் தான் விற்பனையாகிறது. இந்தியாவை விட அதிகமாக விலையில் பெட்ரோலை விற்கும் பல நாடுகள் இருக்கின்றன.

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்தியாவை விட ஹாங்காங், ஃபின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், நார்வே போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை மிக அதிகம் அந்நாட்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 அமெரிக்க டாலரையும் தாண்டி விற்பனையாகிறது. அதே நேரத்தில் சிறிய நாடுகளான வியட்நாம், கென்யா, உக்ரைன், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசுலா குகிய நாடுகளில் பெட்ரோல் விலை இந்தியாவின் பெட்ரோல் விலையை விடக் குறைவாக இருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் பெட்ரோல் விலையும் ஒரு மனிதனின் சராசரி வருமானமும் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக ஏறி இறங்குவதாகத் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வருமானம் என்பது தனி ஆய்வாகவும், பெட்ரோல் விலை தனி ஆய்வாகவும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த இரண்டிற்கும் ஒரு வித ஒற்றுமை இருப்பதை அந்த ஆய்வு வெளி கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு நபரின் சராசரி வருமானம் இந்தியாவில் உள்ள ஒரு நபரின் சராசரி வருமானத்தை ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. அந்த நாட்டில் பெட்ரோல் விலை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கென்யா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளில் ஒரு தனி நபரின் வருமானம் என்பது இந்தியாவில் உள்ள மக்களின் தனி நபரின் வருமானத்தை விடக் குறைவு

இந்தியாவில் பெட்ரோல் விலை

பெட்ரோல் என்பது அத்தியாவசிய தேவை என்பதால் அதை விலையை மக்கள் வாங்கும்படி வைக்க வேண்டியது அரசின் கடமை. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல் விலையில் பெரும் பங்கு பணம் வரியாகவே செல்கிறது. அரசு இந்தியர்களின் சராசரி வருமானத்தைக் கணக்கிட்டு பெட்ரோலுக்கான வரியில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்துவருகிறது. அதே போலவே மற்றநாடுகளும் மக்கள் பெட்ரோலை பயன்படுத்தும்படி விலையைக் குறைவான வரியை விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல் விலை

இது தான் பெட்ரோல் விலை ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய அளவில் மாறுபடுவதற்கான முக்கியமான காரணம். இந்தியா கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்துவதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

ஆனால் இந்த தனி நபர் வருமானமும் பெட்ரோல் விலையிற்குமான ஒப்பீடு எல்லா நாடுகளுக்குச் சரியாக இல்லை. அமெரிக்காவில் இந்தியாவை விடத் தனி நபர் வருமானம் பல மடங்கு அதிகம். ஆனால் அங்கு பெட்ரோல் விலை இந்தியாவை விடக் குறைவுதான். ஆனால் அமெரிக்கா பெரும்பாலான பெட்ரோலை இறக்குமதி செய்யவில்லை தானாகவே உற்பத்தி செய்கிறது. பெரும்பாலான கச்சை எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரும்பாலும் இந்த தனி நபர் வருமானத்தை ஒப்பீடு செய்ய முடிகிறது என இந்த ஆய்டு சொல்கிறது

இந்தியாவில் பெட்ரோல் விலை

இந்தியாவில் கடந்த மே 9ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் ரூ1.35 என விற்பனையானது என நாம் முன்னேர பார்த்தோம். அதே நேரத்தில் மற்ற நாடுகளில் என்ன விலையில் விற்பனையாகிறது எனப் பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோல் விலை

ஜெர்மனியில் 2.29 அமெரிக்க டாலர், இத்தாலியில் 2.28 அமெரிக்க டாலர், பிரான்ஸில் 2.07 அமெரிக்க டாலர், இஸ்ரேலில் 1.96 அமெரிக்க டாலர், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரில் 1.87 அமெரிக்க டாலர், நியூசிலாந்தில் 1.75 அமெரிக்க டாலர், ஆஸ்திரேலியாவில் 1.36 அமெரிக்க டாலர், துருக்கியில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனையாகும் அதே விலை ஒரு லிட்டர் 1.35 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை

அதே போல இந்தியாவை விடக் குறைவாக பெட்ரோல் விற்பனையான நாடுகளும் உள்ளன. அதன்படி ஜப்பானில் 1.25 அமெரிக்க டாலர், சீனாவில் 1.21 அமெரிக்க டாலர், அமெரிக்காவில் 98 சென்ட், வங்கதேசத்தில் 1.05 அமெரிக்க டாலர்,பாகிஸ்தானில் 77 சென்ட், இலங்கையில் 67 சென்ட் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த ஆய்வில் பெட்ரோல் விலைக்கும் தனி நபர் வருமானத்திற்குமான தொடர்பு குறித்த தகவல் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உலகில் ஆஸ்திரேலியா, துருக்கி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே விலையில் தான் அந்நாட்டிலும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Petrol price is linked with per captia income bank of baroda report says
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X