ரூ.2,750 கோடியில் பிரதமர் மோடிக்கு புதிய சொகுசு விமானம்... விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!

பிரதமர் மோடிக்கான புதிய போயிங் 777 சொகுசு விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக இரண்டு போயிங் 747 -400 ஜம்போ விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை ஏர்இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. விவிஐபி பயணங்களின்போது இந்திய விமானப்படையை சேர்ந்த பயிற்சி பெற்ற மூத்த பைலட்டுகள் இயக்குகின்றனர்.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

விவிஐபி பயணம் முடிவடைந்ததும், இந்த விமானங்களின் இருக்கைகள் மாற்றப்பட்டு, வர்த்தக ரீதியில் பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படுகின்றன. இருக்கைகளை மாற்றுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் 12 நாட்களை செலவிடுகிறது. மேலும், இந்த விமானங்கள் வாங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகிவிட்டன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

பிரதமர் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்ளிட்ட நீண்ட தூர நாடுகளுக்கு பயணிக்கும்போது எரிபொருள் நிரப்புவதற்காக இடையில் நின்று செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், பயண நேரம் அதிகரிப்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளும் எழுகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

இந்த நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதையடுத்து, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

இதற்காக, 2016ம் ஆண்டு இரண்டு போயிங் 777-300 இஆர் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. ஒவ்வொரு விமானமும் தலா ரூ.2,100 கோடி மதிப்புடையது. கடந்த 2018 ஆண்டு ஜனவரியில் போயிங் நிறுவனத்திடமிருந்து இந்த விமானங்கள் டெலிவிரி பெறப்பட்டப்பட்டன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

விவிஐபி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், பல்வேறு மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதற்காக மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு விமானங்களிலும் தற்போது கஸ்டமைஸ் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

இந்த நிலையில், மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த விமானங்களின் கஸ்டமைஸ் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த விமானங்களில் விவிஐபி பயன்பாட்டிற்கான ஆலோசனை கூடம், சமையலறை, படுக்கையறை, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், சிறிய ரத்த வங்கி ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான இருக்கை வசதிகளும் உண்டு. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் வைக்கப்பட்டு இருப்பார்கள். உதவிக்கான பணியாளர்களும் இந்த விமானத்தில் இருப்பார்கள். இந்த விமானத்தில் 2,000 பேருக்கான உணவுப் பொருட்களை வைப்பதற்கான வசதியும் உள்ளது..

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

மேலும், இந்த விமானங்களில் சேட்டிலைட் தொலைபேசி வசதி, பிரதமருக்கான தனி அலுவலகம், 19 டிவி திரைகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கும். மொத்தத்தில் பறக்கும் நட்சத்திர விடுதிக்குரிய அனைத்து வசதிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

கடந்த ஆண்டு இந்த இரண்டு விமானங்களுக்குமான உயர் கவச பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதியளித்தது. இதன்மூலமாக, விமானத்தில் ஏவுகணை முறியடிப்பு நுட்பம், கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் ஏவுகணையை செலுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெறும்.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

அணு கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான கட்டமைப்பு தொழில்நுட்பமும், அவசர காலங்களில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் இந்த விமானங்களில் இடம்பெற்றிருக்கும். ரூ.1,500 கோடி மதிப்பில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் வாங்கப்பட்டுள்ளது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

மொத்தத்தில் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் இந்த இரண்டு புதிய விவிஐபி போயிங் 777-300 இஆர் விமானங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. போயிங் 747 விமானம் விவிஐபி பயணங்கள் இல்லாதபோது சாதாரண பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படுகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

ஆனால், புதிய போயிங் 777- 300இஆர் விமானங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட மாட்டாது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயணங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்படும். ஏர் இந்தியா ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் இந்த விமானங்கள் இயக்கப்படும். இந்த இரண்டு விமானங்களின் பராமரிப்புப் பணிகளை ஏர் இந்தியா மேற்கொள்ள இருக்கிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் விமானமும், அடுத்த ஒரு மாதத்தில் மற்றொரு விமானம் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

உலகிலேயே மிகப்பெரிய பயணிகளில் விமானங்களில் ஒன்று போயிங் 777- 300 இஆர் மாடல். இந்த விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 13,650 கிலோமீட்டர் தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் வாய்ந்தது. சாதாரண போயிங் 777 விமானத்தில் 396 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், பிரதமரின் விமானத்தின் உட்புறம் முழுமையாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும்.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

பொதுவாக விவிஐபி பயன்பாட்டிற்கு நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள்தான் வாங்கப்படும். ஆனால், இந்த விமானம் இரண்டு எஞ்சின்கள் கொண்டது. இந்த எஞ்சின்கள் உலகின் சக்திவாய்ந்த விமான எஞ்சின்களில் ஒன்று. அதிகபட்சமாக 513 கேஎன் த்ரஸ்ட் விசையை வாரி வழங்கும் திறன் வாய்ந்தது. மேலும், மிக மிக நம்பகமான எஞ்சின்களாக பெயர் பெற்றிருக்கின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடிக்கான புதிய சொகுசு விமானம்!

இந்த விமானத்தை இரண்டு பைலட்டுகள் இயக்க முடியும். மணிக்கு அதிகபட்சமாக 945 கிமீ வேகம் வரை செல்லும். சராசரியாக 892 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இதனால், நீண்ட தூர பயணங்களை சுலபமாக முடிக்க இந்த விமானங்கள் உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
PM Modi Will Get New Boeing777-300ER Luxury Plane Later This Year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X